Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

3 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா படம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

3 Years Of Dada Movie: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் நடிகர் கவின். இவரது நடிப்பில் முன்னதாக வெளியான டாடா படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படம் வெளியாகி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

3 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா படம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
டாடாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Feb 2026 15:33 PM IST

சின்னத்திரையில் சீரியல்களின் நடித்து பிரபலமான நடிகர் கவின் தற்போது வெள்ளித்திரையில் மக்களிடையே வரவேற்பைப் பெறும் நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் தற்போது தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்ச்னா ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டாடா. இயக்குநர் கணேஷ் கே பாபு படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் கவின் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடித்து இருந்தார். தொடர்ந்து இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், VTV கணேஷ், பிரதீப் ஆண்டனி, கே. ஹரிஷ், ஃபௌஸி ஹிதாயா, கமல்தீப், அரவிந்த் எழிலரசன், சாண்டி, மாஸ்டர் இலன், மாஸ்டர் ஆரவ், குழந்தை நலன் பிரேம்குமார் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்ச்ன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பியா மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ். அம்பேத் குமார் தயாரித்து இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாடா படம் குறித்து இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு:

இந்த டாடம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் கணேஷ் கே பாபு. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் இந்த டாடா படம் திரையரங்குகளில் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இயக்குநர் கணேஷ் கே பாபு தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… தனது புதுப் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும்? சிவகார்த்திகேயன் கொடுத்த மாஸ் அப்டேட்

இயக்குநர் கணேஷ் கே பாபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Premalu: மமிதா பைஜூவின் ஐகானிக் படம்.. 2 வருடங்களை கடந்த ‘பிரேமலு’ திரைப்படம்!