Premalu: மமிதா பைஜூவின் ஐகானிக் படம்.. 2 வருடங்களை கடந்த ‘பிரேமலு’ திரைப்படம்!
2 Years Of Premalu : தென்னிந்திய பிரபல நடிகர்களாக இருந்துவருபவர்கள் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ. இவர்களின் கூட்டணியில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படம்தான் பிரேமலு. இப்படமானது வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்த ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழில் தற்போது இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தமிழில் ரெபெல் (Rebel) என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு (GV.Prakash Kumar) ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு அதிகளவு வரவேற்பை கொடுக்கவில்லை. இப்படத்தை தொடர்ந்து இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) மகளாக இவர் நடித்துள்ளார். இந்த் படமானது 2026 ஜனவரி மாதத்திலே வெளியாகவிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. அந்த விதத்தில் தொடர்ந்து, சூர்யா (Suriya) மற்றும் தனுஷிற்கு (Dhanush) ஜோடியாகவும் படங்களில் நடித்துள்ளார். அந்த விதத்தில் இவருக்கு ஆரம்பத்தில் தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலத்தை கொடுத்த படம்தான் பிரேமலு (Premalu).
இயக்குநர் கிரிஷ் ஏ.டி (Girish A.D) இயக்க, நஸ்லென் (Naslen) மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2024 பிப்ரவரி 9ம் தேதியில் உலகமெங்கும் இப்படம் வெளியானது. இந்நிலையில் இன்றுடன் (2026 பிப்ரவரி 9ம் தேதி) வெளியாகி 2 ஆண்டுகளை கடந்துள்ளது. இது குறித்த ஸ்பெஷல் போஸ்ட்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ரசிகர்களின் பாசிட்டிவ் ரிவ்யூஸ்.. 3 நாட்களில் ‘வித் லவ்’ படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?
பிரேமலு படம் வெளியாகி 2 ஆண்டுகளை கடந்தது குறித்து படக்குழு வெளியிட்ட போஸ்டர்:
Time passed. The smiles stayed. ☺️❤️#2YearsOfPremalu#girishAD #premalu #bhavanastudios pic.twitter.com/pYt2cHU19x
— Bhavana Studios (@BhavanaStudios) February 9, 2026
பிரேமலு திரைப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தை இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்க , ஃபகத் ஃபாசில்தான் தயாரித்திருந்தார். வெறும் ரூ 3 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படமானது, உலகமெங்கும் ரூ 135 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்திருந்தது. மலையாள சினிமாவிலே 2024ம் ஆண்டில் அதிகம் வசூலித்த சிறு பட்ஜெட் திரைப்படம் என்ற பெருமையும் இப்படம் பெற்றிருந்தது.
இதையும் படிங்க: சர்வம் மாயா வெற்றியைத் தொடர்ந்து அதிரடி படத்தில் இணைந்த ரியா ஷிபு… வைரலாகும் போஸ்டர்
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரேமலு பார்ட் 2 படமானது தயாராகவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், இன்னும் அதுகுறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை. மேலும் இப்படத்தின் இயக்குநர் கிரிஷ் ஏ.டி, தற்போது நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூவை வைத்து பெத்தேல்ஹெம் கும்ப யூனிட் என்ற படத்தை இயக்கிவருகிறார். தற்போதும் இந்த பிரேமலு படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.