Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குக்கூ படத்தை முதலில் நான்தான் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தேன் – சசிகுமார் பேச்சு

Sasikumar Talks about Cuckoo Movie: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சசிகுமார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ராஜூ முருகனின் குக்கூ படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குக்கூ படத்தை முதலில் நான்தான் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தேன் – சசிகுமார் பேச்சு
சசிகுமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Feb 2026 10:52 AM IST

தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களை இயக்கி மக்களிடையே கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் பாலா. இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி தற்போது தமிழ் சினிமவில் பிரபல நடிகராக வலம் வருபவர்தான் இயக்குநர் சசிகுமார். அதன்படி பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியபோது அவரது இயக்கத்தில் வெளியான சேது படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு சசிகுமார் இயக்குநராக அறிமுகம் ஆன சுப்ரமணியபுரம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து இயக்குநராக சுப்ரமணியபுரம் மற்றும் ஈசன் ஆகியப் படங்களை மட்டும் இயக்கி இருந்தாலும், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பலப் படங்களில் பணியாற்றியுள்ளார் சசிகுமார். அதன்படி சசிகுமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் தயாரிப்பில் வெளியாகும் படங்களும் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் நடிகர் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மை லார்ட். இந்தப் படத்தை இயக்குநர் ராஜூ முருகன் எழுதி இயக்கி உள்ளார். உயிருடன் இருக்கும் ஒரு குடும்பத்தை இறந்துவிட்டதாக அரசு சான்றிதழ்கள் தெரிவிக்கும் நிலையில் அவர்கள் எப்படி அதனை கையாழ்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் நடிகர் சசிகுமார் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குக்கூ படத்தை முதலில் நான்தான் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தேன்:

ஆரம்பத்தில் ராஜு முருகனின் ‘குக்கூ’ திரைப்படத்தைத் தயாரிக்க நான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது ஷங்கர் சாரிடம் சென்றுவிட்டது. பிறகு, எனக்கு இரட்டை வேடம் கொண்ட ஒரு முழுமையான அதிரடித் திரைப்படத்தையும், மேலும் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் ஒரு இரட்டை நாயகன் கதையையும் செய்யத் திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் நாங்கள் ‘மை லார்ட்’ படத்தில் வந்து நின்றோம் என்று அந்தப் பேட்டியில் சசிகுமார் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… என்னால் விஜயை பிரித்து பார்க்க முடியாது – நடிகர் சிலம்பரசன்

இணையத்தில் கவனம் பெறும் சசிகுமாரின் பேச்சு:

Also Read… பூஜையுடன் தொடங்கியது தனுஷ் 55 படத்தின் படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்