Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

D55 Movie: தனுஷின் ‘டி55’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!

Dhanushs D55 Movie Grand Launch: தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பிலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்திலும் உருவாகவுள்ள படம்தான் டி55. இப்படத்தின் ஷூட்டிங் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில், அதன் ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

D55 Movie: தனுஷின் ‘டி55’ படத்தின் ஷூட்டிங் பூஜை.. படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்!
D55 படப்பிடிப்பு பூஜை வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Feb 2026 10:40 AM IST

கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக இந்தி மொழி திரைப்படமான தேரே இஷ்க் மே (Tere Ishq Mein), கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகியிருந்தது. இந்த படமானது வட இந்தியாவில் தனுஷிற்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக போர் தொழில் (Por Thozhil) பட இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் (Vignesh Raja) இயக்கத்தில் டி54, அதாவது “கர” (Kara) என்ற படத்தில் தனுஷ் நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்த படத்தில் இணைந்துள்ளார். அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் (Rajkumar Periasamy) இயக்கத்தில், டி55 (D55) என்ற படத்தில் தனுஷ் கதாநாயகனாக இணைந்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி (Sai Pallavi) மற்றும் ஸ்ரீலீலா (Sreeleela) என இரு நடிகைகள் இணைந்து நடிக்கவுள்ளனர்.

மேலும் மலையாள நடிகர் மம்முட்டி (Mammooty) இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் பூஜை நேற்று 2026 பிப்ரவரி 5ம் தேதியில் நடந்த நிலையில், அது குறித்த ஸ்பெஷல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கென் கருணாஸின் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ்.. நகைச்சுவையாக வெளியான வீடியோ இதோ!

தனுஷின் டி55 படத்தின் ஷூட்டிங் பூஜை தொடர்பாக படக்குழு வெளியிட்ட வீடியோ பதிவு :

தனுஷின் இந்த டி55 படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஷூட்டிங் பூஜையில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இயக்குநர்கள் சங்கர், விக்னேஷ் ராஜா, ஆகாஷ் பாஸ்கரன், எஸ்.ஜே.சூர்யா, மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் லலித், உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: கார்த்தியின் ஜப்பான் பட தோல்வி.. அதன் முழு பொறுப்பு நான்தான் – இயக்குநர் ராஜு முருகன்!

இந்த படத்தின் பூஜைகளுடன் படப்பிடிப்பும் தொடங்கியுள்ள நிலையில், இப்படமானது சுமார் ரூ 120 முதல் ரூ 180 கோடிகள் பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமரன் படத்தை விடவும் இந்த படத்தில் அதிக ஆக்ஷன் காட்சிகள் மற்றும் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து இப்படத்திலிருந்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.