என்னால் விஜயை பிரித்து பார்க்க முடியாது – நடிகர் சிலம்பரசன்
Actor Silambarasan about Vijay Politics Entry: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதுகுறித்து நடிகர் சிலம்பரசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் செய்தி ஜன நாயகன் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்பதுதான். நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவான இந்த ஜன நாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு சென்சார் பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்திற்கு விரைவில் சென்சார் சான்றிதழ் வழங்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் சென்சார் காரணமாக படம் வெளியாகாமல் போனதற்கு திரையுலகில் உள்ள பலர் விஜய்க்கு ஆதவராக குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வரும் நிலையில் தொடர்ந்து பிரபலங்களிடம் ஜன நாயகன் குறித்தும் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றது. அதன்படி சமீபத்தில் நடிகர் சிம்புவிடம் நேர்காணலில் ஜன நாயகன் குறித்தும் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிம்பு அளித்தப் பதிவில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




என்னால் விஜயை பிரித்து பார்க்க முடியாது:
ஜனநாயகன் விவகாரம் தொடர்பாக நீங்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள்… ஒரு அரசியல்வாதியாக விஜயிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சிலம்பரசன் ‘ஜனநாயகன்’ விஜய் என்பதையும், தனிப்பட்ட மனிதரான விஜய் என்பதையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியாது.
அவர் இத்தனை ஆண்டுகளாகத் திரையுலகில் இருக்கிறார், இப்போது தனது கடைசிப் படம் என்று சொல்லப்படும் படத்தை முடித்திருக்கிறார். அந்தப் படம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்றும், திரையுலகைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில் நாம் அவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றும் மட்டுமே நான் கூறினேன். அதனால்தான் அந்த ட்வீட்டைப் பதிவிட்டேன். எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது, அதில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை. அரசியல் பற்றிப் பேசுவதற்கு நான் சரியான நபர் அல்ல. அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
Also Read… நீங்கள் இல்லாமல் நான் இல்லை… நடிகர் சிம்பு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் பேச்சு:
#SilambarasanTR Recent AV Interview
— You’ve expressed support for Vijay regarding the JanaNayagan issue… What do you like about #Vijay as a politician?
— I can’t separate ‘#JanaNayagan’ Vijay from Vijay the person. He has been in cinema for so many years and has now done… pic.twitter.com/OO9PEZvqLv
— Movie Tamil (@_MovieTamil) February 5, 2026
Also Read… லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் 2-வது படத்தில் டைட்டில் லீடர் – வெளியானது க்ளிம்ஸ் வீடியோ