Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீங்கள் இல்லாமல் நான் இல்லை… நடிகர் சிம்பு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

Silambarasan Thanks To Fans: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் நேற்று தனது 43-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு சிலம்பரசன் நன்றி தெரிவித்துள்ளார்.

நீங்கள் இல்லாமல் நான் இல்லை… நடிகர் சிம்பு வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
சிலம்பரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Feb 2026 15:03 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் கடந்த 1984-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் சிலம்பரசன் கடந்த 2002-ம் ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு சிலம்பரசன் நடிப்பில் வெளியான படங்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்த நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை மிகவும் ஸ்ட்ராங்காக பிடித்தார். மேலும் இவருக்கு தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது அடுத்தடுத்தடுத்தப் படங்கள் உருவாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடிக்க உள்ள நிலையில் அடுத்ததாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் நேற்று பிப்ரவரி மாதம் 03-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இதற்கு நடிகர் சிலம்பரசன் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீங்கள் இல்லாமல் நான் இல்லை:

எனக்குக் கிடைத்த பிறந்தநாள் வாழ்த்துக்களாலும், அன்பான வரவேற்பாலும் நான் நெகிழ்ந்து போனேன். திரையுலகைச் சேர்ந்தவர்கள், ஊடக நண்பர்கள், மற்ற நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அன்புடன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என் ரசிகர்களே, இத்தனை ஆண்டுகளாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் ஆதரவுமே என் உந்துசக்தி. உங்கள் பாசத்தாலும் ஊக்கத்தாலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்துள்ளேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read… திரைத்துரையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்த துல்கர் சல்மான்… கொண்டாடும் திரையுலகினர்!

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம் – நடிகர் சூரி வெளியிட்ட வீடியோ!