Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சைக்கோ கொலையாளியாக மிரட்டும் மம்முட்டி… ஓடிடியில் வெளியாகியுள்ள கலம்காவல் படம் எப்படி இருக்கு?

Kalamkaval Movie OTT Review: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மாபெரும் கவனத்தை ஈர்த்தப் படம் கலம்காவல். நடிகர் மம்முட்டி சைக்கோ கொலையாளியாக நடித்துள்ல இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சைக்கோ கொலையாளியாக மிரட்டும் மம்முட்டி… ஓடிடியில் வெளியாகியுள்ள கலம்காவல் படம் எப்படி இருக்கு?
கலம்காவல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Feb 2026 20:23 PM IST

மலையாள சினிமாவைப் பொருத்தவரை நடிகர்களுக்குள் எந்த வரையரையும் கிடையாது. ஒரு படத்தில் நாயகனாக நடித்த ஒருவர் மற்றொரு படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திலோ அல்லது காமெடி ரோலிலோ எந்த தயக்கமும் இல்லாமல் நடிப்பார்கள். இது உச்ச நடிகர்களில் இருந்து தற்போது நடிக்க வந்த நடிகர்கள் வரை வழக்கமாக நடைபெறும் ஒன்றாக உள்ளது. மற்ற மொழி சினிமாவில் எல்லாம் பெருமாலும் நடிக்கத் தொடங்கும் போது அவர்கள் நாயகனாகவோ, வில்லனாகவோ, காமெடியனாகவோ நடிக்கத் தொடங்கிவிட்டால் அவர்கள் அடுத்தடுத்து அந்த மாதிரியான வேடங்களிலேயே நடிக்கும் சூழல் ஏற்படுகிறது. அவர்கள் தங்களுக்கு வேறு மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கிறது என்று தெரிவித்தாலும் தொடர்ந்து எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கும். ஆனால் இந்த நிலை மலையாள சினிமாவில் உள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகளிடையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் மம்முட்டி சமீபத்தில் சைக்கோ கொலையாளியாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கலம்காவல்.

மம்முட்டியின் கலம்காவல் படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் கேரள – தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து நடைப்பெற்ற மரணங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியா நடிகர் விநாயகன் நடித்து இருந்தார். தொடர்ந்து பெண்கள் காணாமல் போய் அவர்கள் சடலாமாக கிடைக்கும் நிலையில் அவர்கள் சைனைட் சாப்பிட்டு இறந்தது போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் தெரிகிறது. பிறகு அந்த வழக்கை விசாரிக்கும் விநாயகன் தொடர்ந்து ஒவ்வொரு பெண்ணின் வழக்கை விசாரித்து அவர்களின் போன் நம்பர்களை ட்ரேஸ் செய்யும் போது அடுத்தடுத்த பெண்களுடன் கனெக்டாகி அந்த வழக்கு நீண்டுகொண்டே செல்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் இந்த கொலைகளை அனைத்தும் தமிழ் நாடு எல்லையில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் மம்முட்டிதான் செய்துவருகிறார். திருமண வயதைக் கடந்து திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள், விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை டார்கெட் செய்து அவர்களை காதல்வலையில் சிக்கவைத்து அவர்களை ஏமாற்றி உடலுறவு கொண்ட பிறகு அவர்களை கொலை செய்வதை மிகவும் மகிழ்ச்சியான விசயமாக செய்து வருகிறார்.

Also Read… Dhanush: ‘விஜய் சார் எப்போதுமே சைலண்டாதான் இருப்பாரு’ – தனுஷ் பகிர்ந்த விஷயம்!

இப்படி மம்முட்டி ஒருபுறம் தொடர்ந்து கொலைகளை செய்துக்கொண்டு ஜாலியாக சுற்றி வரும் போது அந்த வழக்கை விசாரித்த விநாயகன் இறுதியாக மம்முட்டி வேலை செய்யும் காவல்நிலையத்திற்கே வருகிறார். அங்கு விநாயகனுக்கு உதவுவதாக தானே முன்வந்து மம்முட்டி வழக்கின் போக்கை அறிந்துகொண்டு தனது பாட்டனை மாற்றுகிறார். இதனால் விநாயகனுக்கு கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனைத் தாண்டி அவர் எப்படி மம்முட்டிதான் கொலையாளி என்பதை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் ட்விஸ்ட். இந்தப் படம் தற்போது சோனிலிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… அஞ்சல பாடலுக்கு கௌதம் மேனனுடன் டான்ஸ் ஆடிய நடிகர் சூர்யா – வைரலாகும் வீடியோ