AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் லோகேஷ் கனகராஜின் டிசி படம் – போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் படக்குழு!

DC movie team is celebrating the movie's success | தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகம் ஆகி உள்ள டிசி படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படக்குழு அதனை தற்போது கொண்டாடி வருகின்றது.

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் லோகேஷ் கனகராஜின் டிசி படம் – போஸ்டர் வெளியிட்டு கொண்டாடும் படக்குழு!
டிசி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2026 12:36 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம், கூலி மற்றும் லியோ என அனைத்தும் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநராக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாகவும் அறிமுகம் ஆகி உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் ஆக்‌ஷனுக்கு பஞ்சம் இருகாது. அதே போல அவர் நாயகனாக அறிமுகம் ஆன டிசி படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், அவினாஷ் ரகுதேவன், கிரிஷ் தயாள், பாலாஜி தேவிபிரசாத், ஜவஹர் சக்தி, பிரணவ் தியோபின், கஸ்தூரி ராஜா மற்றும் ஆடுகளம் நரேன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிநடை போடும் லோகேஷ் கனகராஜின் டிசி படம்:

தென்னிந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இந்தப் படத்தை தயாரித்து உள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் இந்த டிசி படத்தில் அவரது இசை மேலும் வழு சேர்த்து உள்ளதாக பார்வையாளர்கள் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் படத்தினை பார்க்கும் ரசிகர்கள் தொடர்ந்து படங்களை கொண்டாடி வரும் நிலையில் அதனை படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இணையத்தில் வைரலாகும் நடிகர் தனுஷின் ரீசென்ட் போட்டோ

டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அஜித்தின் படங்களை ஏன் தயாரிக்கவில்லை? – விளக்கம் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி!

Follow Us