ஜீவாவாக மாளவிகா மோகனன்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பாக்கெட் நாவல் பட BTS வீடியோ!
Malavika Mohanan as Jeeva: தென்னிந்திய திரைத்துறையில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மாகாவிகா மோகனன். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பாக்கெட் நாவல் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் கதாபாத்திம் மற்றும் BTS வீடியோ வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்துவருபவர் மாளவிகா மோகனன் (Malavika Mohanan). இவர் மலையாளம் சினிமாவின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருந்தாலும், மற்ற மொழி படங்களில் இவருக்கு வரவேற்பு அதிகம்தான். தமிழில் இவர் பேட்ட (Petta) என்ற படத்தின் முக்கியமான வேடத்தில் நடித்து நாயகியாக நுழைந்த நிலையில், பின் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு (Thalapathy Vijay) ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார். இவர் இறுதியாக இதயம் முரளி (Idhayam Murali) திரைப்படத்தில் முக்கியமான கேமியோ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் நடித்திருக்கும் காட்சியானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின் இவர் நாயகியாக நடித்துவரும் புது படம்தான் பாக்கெட் நாவல் (Pocket Novel).
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் (Thiagarajan Kumararaja) இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், மாளவிகா மோகனனின் கதாபாத்திர அறிமுகம் மற்றும் பாக்கெட் நாவல் பட ஷூட்டிங் BTS காட்சி இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரியோவின் ராம் இன் லீலா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
பாக்கெட் நாவல் படத்திலிருந்து வெளியான மாளவிகா மோகனனின் BTS மற்றும் கதாபாத்திர அறிமுக வீடியோ:
Cutie Maalu in her element 😍 from the #PocketNovel BTS 💫 & that Glimpse from the movie of @MalavikaM_ such a graceful , elegant and powerful one ❤️✨#MalavikaMohanan as Jeeva 💫
From 🎬 #ThiagarajanKumararaja’s world 🎥 pic.twitter.com/qUKlJswcdE— Balaji (@RDBalaji) August 5, 2026
நடிகை மாளவிகா மோகனன் பாக்கெட் நாவல் படத்தில் ஜீவா என்ற வேடத்தில் நடித்துவருகிறாராம். இதில் அவர் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்துவருகிறார். இப்படம் கொள்ளை மற்றும் பணம் சார்ந்த ஒரு பேமிலி டிராமா கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது சிறப்பான கதையில் உருவாகிவருவதாக வட்டாரங்கள் கூறுகிறது.
பாக்கெட் நாவல் பட ரிலீஸ் எப்போது இருக்கும்:
இந்த பாக்கெட் நாவல் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனுடன் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டியும் மிக முக்கியமான வேடத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் கதையை வதந்தி 2 வெப் தொடர் இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் எழுத, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிவருகிறார்.
இதையும் படிங்க: ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டியது தளபதி விஜயின் படம் தான் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, தியாகராஜன் குமாரராஜா மற்றும் எழில்மதி என இருவரும் சேர்ந்து தயாரித்துவருகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. விரைவில் இதன் ரிலீஸ் மற்றும் பாடல்கள் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.