AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DC: ரத்தமும், காதலும் கலந்த காவியம்.. லோகேஷ் கனகராஜின் டிசி படம் எப்படி இருக்கு? – ரிவியூஸ் இதோ!

Lokesh Kanagaraj DC Movie Review: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புது திரைப்படம்தான் டிசி. அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளியான இப்படம், அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் கதையில் உருவாகியுள்ளது. இப்படம் இன்று (07/08/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு கிடைத்திருக்கும் விமர்சனங்களை காணலாம்.

DC: ரத்தமும், காதலும் கலந்த காவியம்.. லோகேஷ் கனகராஜின் டிசி படம் எப்படி இருக்கு? – ரிவியூஸ் இதோ!
டிசி திரைப்பட விமர்சனம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Aug 2026 12:40 PM IST

தமிழில் கேப்டன் மில்லர் (Captain Miller) , சாணி காயிதம் (Saani Kaayidham) போன்ற ஆக்ஷன் மற்றும் அதிரடி படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர் அருண் மாதேஸ்வரன் (Arun Madhswaran). இவரின் இயக்கத்தில் தமிழில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் டிசி (DC Movie). இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி (Sanjana Krishnamoorthy) மற்றும் வாமிகா கபி (Wamiqa Gabbi) போன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இது லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் சிறப்பாக இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிரடி காதல் மற்றும் ஆக்ஷன் ரோமெண்டிக் கதைக்களம் கொண்ட படமாக இது உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 07ம் தேதியில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படமானது காலை 9 மணி காட்சிகளுடன் தமிழகத்தில் திரையிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கிறதாம்.

இதையும் படிங்க: தர்மன் படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு காரணம் இதுதான் – ராஷி கண்ணா!

தேவதாஸாக லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படம் எப்படி இருக்கு:

லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் தேவதாஸ் என்ற வேடத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தில் அதிகம் சண்டையிடும் ஒரு நபராக இருக்கிறார். இவரும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் காதலித்துவருகிறார்கள். இப்படத்தின் முதல் பாதி முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளதாம். மேலும் இதன் முதல் பாதியில் சஞ்சனா மற்றும் லோகேஷ் கனகராஜின் காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். இதில் லோகேஷ் கனகராஜ் ஒரு அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். மேலும் வாமிகா கபியின் காட்சிகள் முழுக்க 2வது பாதியில் உள்ளதாம்.

இதையும் படிங்க: விவாகரத்து செய்கிறாரா கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி? அப்படி என்ன செய்தார் தெரியுமா?

டிசி படத்தை நிலைநாட்டும் அனிருத்தின் இசை:

சன் பிக்ச்சர்ஸ் தயாரித்த டிசி படத்திற்கு அனிருத்தான் இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது. டிசி படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் அனிருத்தின் இசை நின்று பேசுகிறது என கூறலாம். காதல் மற்றும் ரோமெண்டிக் BGM- சிறப்பாக உள்ளது.

டிசி திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா? வேண்டாமா?

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன் சில படங்களில் கேமியோ வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் முழுமையாக டிசி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகள் நிரம்பியுள்ளது. இப்படத்தில் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ஆக்ஷன் திரைக்கதைகளை விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மேலும் குறிப்பாக இப்படத்தை திரையரங்குகளில் 18 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us