Lokesh kanagaraj : கூலியில் மோனிகா பாடல் வைக்க காரணம் இதுதான்…. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்!
Lokesh Kanagaraj About Monica Song : தமிழ் சினிமாவில் 2025, ஆண்டு அதிகம் வசூல் செய்து வெற்றி கூலி. இப்படத்தை லோகேஷ் இயக்க, ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் மோனிகா என்ற சிறப்புப் பாடலை வைப்பதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் இயக்குநர் இந்த 2025ம் ஆண்டு, அதிகம் வசூல் செய்த படத்தைக் கொடுத்த இயக்குநர்களில் ஒருவர்தான் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanahgaraj). இவரின் இயக்கத்தில் வெளியான அந்த ஹிட் படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருடன் நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), ஆமிர் கான், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் (sathyaraj) மற்றும் சவுபின் ஷாஹிர் என பான் இந்தியப் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படமானது கடந்த 2025, ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகியிருந்தது. ரஜினிகாந்த்துடன் லோகேஷ் கனகராஜ் இணைந்த முதல் கூட்டணியே, மாஸ் ஹிட் படமாக அமைந்திருக்கிறது.
இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும், நல்ல வசூலைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் பூஜா ஹெக்டேவின் மோனிகா அப்பாடல் வைத்ததற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ரஜினிகாந்தின் கூலி – வெளியான ‘கொக்கி’ லிரிக்கல் பாடல்!
மோனிகா பாடல் வைக்க காரணம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேச்சு
அந்த நேர்காணலில், இயக்குநர் லோகேஷ் கனகராஜிடன் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குத் தொடர்ந்து பதிலளித்த லோகேஷ், மோனிகா பாடல் வைத்ததைக் காரணம் பற்றி பேசியிருந்தார். அதில் லோகேஷ் கனகராஜ், ” மோனிகா பாடல் வைப்பதற்குக் காரணம் பிசினஸ் தான். பொதுவாக எனது திரைப்படங்களில் இதுபோன்ற சிறப்புப் பாடல் ஒன்றும் இருக்காது.
இதையும் படிங்க : விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரிலீஸில் தேம்பி அழுத பிரேமலதா
மேலும் எல்லா மொழிகளிலிருந்து நடிகர்கள் இருக்கும்போது, ஒரு பான் இந்தியத் திரைப்படமாக இருக்கும்போது மற்றும் படத்தின் பட்ஜெட்டும் பெரியது என்ற காரணத்தால்தான் கூலி படத்தில் மோனிகா பாடலை வைத்தோம். அதிலும் அந்த பாடலுக்கான யோசனையைக் கொடுத்தது அனிருத்தான். அவரும் நானும் மோனிகா பெல்லூசியின் மிகப்பெரிய ரசிகர்கள்” எனவும் அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருந்தார்.
கூலி பட வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு
Karangal Osarattumey!🙌🏻💥 #Coolie Rule is unstoppable! 😎#Coolie becomes the Highest worldwide gross collection in the history of Tamil Cinema with 404+ crores in just 4 days! 🔥⚡#Coolie ruling in theatres worldwide🌟@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan… pic.twitter.com/VMeITJCpnc
— Sun Pictures (@sunpictures) August 18, 2025
இந்த கூலி படமானது வெளியாகி 4 நாட்களில் மொத்தமாக சுமார் ரூ 404 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. அதிலும் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ 115 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் இப்படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்திருந்தாலும், மொத்தத்தில் இப்படமானது சூப்பர் ஹிட் படமாகவே ஆகிவிட்டது. சுமார் ரூ 355 கோடி செலவில் உருவான இப்படம், சுமார் ரூ 404 கோடியை வசூல் செய்து சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இப்படம் கிட்டத்தட்ட ரூ 550 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.