Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Lokesh Kanagaraj : ரஜினி சாரிடம் எதை மிஸ் பண்ணோமோ அது கூலியில் இருக்கும்.. லோகேஷ் கனகராஜ் அதிரடி

Lokesh Kanagaraj About Rajinikanth : லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், பான் இந்தியப் படமாக உருவாகியிருப்பது கூலி. ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கும் நிலையில், இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Lokesh Kanagaraj : ரஜினி சாரிடம் எதை மிஸ் பண்ணோமோ அது கூலியில் இருக்கும்.. லோகேஷ் கனகராஜ் அதிரடி
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 05 Aug 2025 23:22 PM

2025ம் ஆண்டில் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் திரைப்படத்தில் ஒன்றுதான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Super Star Rajinikanth) முன்னணி நடிப்பில் இப்படம் உருவாகியிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன், நடிகர்கள் ஆமிர்கான் (Aamir Khan), நாகார்ஜுனா (Nagarjuna), ஸ்ருதி ஹாசன் சத்யராஜ், உபேந்திரா மற்றும் சௌபின் ஷாஹிர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா 2025, ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினி சாரிடம் பல வருடமாக மிஸ் செய்த விஷயம் இந்த கூலி படத்தில் கொடுக்க முயற்சி செய்துள்ளதாகக் கூறியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : தொடரும் வசூல் வேட்டை.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ பட 2வது நாள் வசூல் விவரம் இதோ!

ரஜினிகாந்த்தின் நடிப்பு குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் அதில், ” அவரிடம் நாம், எதை மிஸ் பண்ணினோமோ,  சமீப காலமாக அவரிடம் இருந்து எதை பார்க்காமல் இருந்தோமோ, அவற்றை எல்லாம் கூலி படத்தில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன். சொல்லப்போனால் ரஜினி சாரிடம் பழைய படங்களில் சின்ன சின்ன ஹியூமர் விஷயங்கள் இருக்கும். அதையெல்லாம் பார்த்துக் கொஞ்ச நாள் ஆகிறது. கடைசியாக பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜ் அருமையாகக் காட்டியிருந்தார்.

கூலி படத்தின் நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அமீர்கான்

இதையும் படிங்க : நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?

அந்த படத்தின் சண்டைக் காட்சி முடியும்போது,  மாஸ் டயலாக்கை பேசுவது போல அது இருந்தது. அந்த மாதிரியான விஷயங்களைக் கூலி படத்தில் கொண்டுவரலாம், ரஜினி சாரிடம் எதையெல்லாம் நாம் இழந்தோமோ அதையெல்லாம் திருப்பி கொண்டுவரலாம் என்பதுதான் எனது யோசனையாக இருந்தது. அதைப் போல் கூலி படத்தில் படம் முடிந்த வரைக்கும், ரஜினி சாரிடம் நாம் மிஸ் பண்ணிய விஷயங்களைக் காட்டியிருக்கிறேன் என நினைக்கிறேன்” என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.