Jana Nayagan: நேர்மையான போலீஸ்.. ஜனநாயகன் கதை இதுவா?
Jana Nayagan Movie Plot Details : தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம்தான் ஜன நாயகன். தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் நிலையில், மக்கள் மத்தியில் பரபரப்பாக இருந்து வருகிறது. தற்போது இப்படத்தின் கதைக்களம் குறித்து, இணையத்தில் தகவல்களை வைரலாகி வருகிறது. அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான இப்படமானது, எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில், பான் இந்திய திரைப்படமாக உருவாகியிருப்பது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் ஜன நாயகன் படமானது தரமாக உருவாகிவருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை அடுத்ததாக இரண்டாவது முறையாக, விஜயுடன் ஜனநாயகன் படத்தில் இணைந்துள்ளாரா என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் இந்த படமானது அவரின் கடைசி படமாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இப்படத்தில் விஜய் 3வது முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அது குறித்துப் பார்க்கலாம்.




இதையும் படிங்க : உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!
ஜன நாயகனின் கதைக்களம் குறித்து இணையத்தில் வைரலாகும் தகவல் :
தளபதி விஜய்யின் 69வது படமாக ஜன நாயகன் உருவாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் இறுதியில் ஆரம்பமாகி, 2025 மே தொடக்கத்தில் நிறைவடைந்திருந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய், ஊழல்களுக்குத் துணை போகும் அரசியல்வாதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும், நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம்.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் எந்த படம் பண்ணாலும்… அனிருத் அதிரடி!
மேலும் தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் பின்பற்றவேண்டிய விஷயங்கள், எதற்கெல்லாம் கட்டுப்படக்கூடாது என்பதைக் குறித்து, தளபதி விஜய் கூறும் காட்சிகள் ஜன நாயகன் படத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஊழல்கள் இல்லாமல், ஜன நாயகம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை இப்படத்தின் கதைக்களம் கூறுவதாக இப்படத்தின் கதைக்களம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இது உண்மையான தகவலா என்று உறுதியாக தெரியவில்லை.
ஜன நாயகனை படத்தின் போஸ்டர் :
Thalapathee 🔥#HBDThalapathyVijay #JanaNayaganTheFirstRoar ▶️ https://t.co/Q981uzk8jA#JanaNayagan #JanaNayakudu#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @Jagadishbliss… pic.twitter.com/6Gv2doGAla
— KVN Productions (@KvnProductions) June 22, 2025
தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இறுதியாக ஜன நாயகன் படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்திலிருந்து வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முதல் பாடலும் இந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.