AR Murugadoss: விஜய் பேசுவதில் எந்த ஆச்சரியமும் எனக்கில்லை.. ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு!
AR Murugadoss About Thalapathy Vijay : பான் இந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரின் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் அஜித் வரை பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், தளபதி விஜயின் அரசியல் பவர்புல் பேச்சு குறித்து , இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில், தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாகத் தர்பார் (Dharbar) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாகப் பாலிவுட்டில் நடிகர் துல்கர் சல்மானுடன் சிக்கந்தர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது படு தோல்வியாக அமைந்தது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் நடிப்பில் மதராஸி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர், முருகதாஸ், தளபதி விஜய்யின் (Thalapathy VIjay) பேச்சு குறித்து பேசியுள்ளார். அரசியல் மேடைகளில் அவர் பேசுவது குறித்து, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசியுள்ளார். அவரின் ஷூட்டிங் ஸ்பாட் நடத்தைகள் குறித்தும், ஆன் ஸ்க்ரீன் நடிப்பு குறித்தும் அவர் பேசியுள்ளார்.




இதையும் படிங்க : கனிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுனது இவ்வளவு வைரலாகும் நான் நினைக்கல – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
தளபதி விஜயை பற்றி ஏ.ஆர். முருகதாஸ் கூறிய விஷயம் :
அந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் கத்தி படத்தில் பேசியது போல நிஜத்திலும் பேசவேண்டும் என கூறியிருந்தீர்கள், அவர் தற்போது நிஜத்திலும் அவ்வாறு பேசுகிறார். அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என அந்த ரசிகர், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் கேள்வி கேட்டிருப்பார். அதற்குப் பதிலளித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், ” ஆமாம் நானும் அந்த வீடியோவை பார்த்திருந்தேன். அப்போது விஜய் சார் அவ்வாறு பேசவேண்டும் என எதார்த்தமாகத்தான் நான் கூறினேன். ஏனென்றால் விஜய் சாரை பொறுத்த வரையிலும் அவர் மிகவும் அமைதியான நபர்.
இதையும் படிங்க : ஆடியன்ஸ்கு நிஜமாவே பிடிக்கும்… காந்தா படம் குறித்து துல்கர் சல்மான் வெளியிட்ட பதிவு!
ஏ.ஆர். முருகதாஸ் விஜய் குறித்து பேசிய வீடியோ :
#ARMurugadoss about #ThalapathyVijay
– #Vijay sir is a very quiet person, He has a split personality.
– I’ve already seen his powerful speeches on set, so I wasn’t surprised.#JanaNayagan pic.twitter.com/UYKvtlvc6H— Movie Tamil (@MovieTamil4) July 30, 2025
நிறைய முனு முனு என்றுதான் பேசுவார். அதனால்தான் நான் முன்னால், அந்த நேர்காணலில் விஜயை பற்றி அவ்வாறு பேசியிருந்தேன். மேலும் விஜய் படத்திலும் தைரியமாகப் பேசியிருக்கிறார். நான் அவரை பார்த்து பிரம்மிப்பான விஷயம் என்னவென்றால், அவர் ஷூட்டிங் ஆன் ஸ்க்ரீனில் ஒருமாதிரி இருப்பார். ஷூட்டிங் முடிந்ததும் ஒருமாதிரி இருப்பார். இப்போதும் அவர் மேடைகளில் பேசுகிறதைப் பார்க்கும்போது, நான்தான் ஏற்கனவே ஷூட்டிங்கில் பார்த்ததால், பெரிதும் எனக்கு ஆச்சரியமாக இல்லை” என அவர் அந்த நேர்காணலில் கூறியிருந்தார் .