Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MS Bhaskar: உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!

MS Baskar : தமிழ் சினிமாவில் பிரபல துணை நடிகர், நகைச்சுவை நடிகராகவும் தனது சினிமா வாழ்க்கையை நடத்தி வருபவர் நடிகர் எம்.எஸ். பாஸ்கர். இவருக்கு 71வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், பார்க்கிங் படத்திற்காகச் சிறந்த துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து எம்.எஸ். பாஸ்கர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

MS Bhaskar: உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்- தேசிய விருது வென்ற எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி!
எம்.எஸ்.பாஸ்கர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Aug 2025 10:51 AM

கோலிவுட் சினிமாவில் நடிகர்களைத் தொடர்ந்து துணை நடிகர்களும் தற்போது முன்னேறி வருகின்றனர். அந்த வகையில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் வரை பல முன்னணி பிரபலங்களின் படங்களில், துணை கதாபாத்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் எம்.எஸ். பாஸ்கர் (MS. Baskar). இவர் தற்போது தமிழ் சினிமாவில் துணை நடிகராகப் பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் பார்க்கிங் (Parking). இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கூட மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இந்த படத்திற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது (National Award for Best Supporting Actor) கிடைத்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பின் கீழ், சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 71வது தேசிய விருதுகள் அறிவிப்பு.. விருது வென்ற தமிழ் பிரபலங்கள்!

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசிய வீடியோ :

தேசிய விருது வென்றது குறித்து நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேச்சு :

அதில் அவர் , “பார்க்கிங் படத்திற்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது எனக்கு வழங்கியிருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்,ரொம்ப மகிழ்ச்சி. மேலும் கூடுதலாக பார்க்கிங் படத்திற்காக சிறந்த திரைக்கதை, சிறந்த படம் போன்ற விருதும் கிடைத்திருக்கிறது என்று நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

இதையும் படிங்க : கூலி படத்தில் வன்முறை காட்சிகள்.. லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

மேலும் இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும், தயாரிப்பாளர் சிரீஷ் அவர்களுக்கும், சுதன் அவர்களுக்கும், படத்தின் கதாநாயகன் அன்பு மகன் ஹரிஷ் கல்யாணுக்கும் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் எப்போது கடமை பட்டுள்ளேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி” என நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியுள்ளார்.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் குறித்து ராம்குமார் பாலகிருஷ்ணன் பேச்சு :

நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு சிறந்தது துணை நடிகருக்கான விருது கிடைத்திருக்கும் நிலையில், சினிமாவில் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன், “நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சார்தான் இந்த விருதைப் பெறச் சரியானவர். அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம், எனக்கு முன்பே இருந்தது. அவருக்கு எனது படத்தின் மூலம் கிடைத்தது எனக்கு நிறையச் சந்தோஷம்” எனக் கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.