Lokesh Kanagaraj: கூலி படத்தில் வன்முறை காட்சிகள்.. லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
Lokesh Kanagaraj About Coolie Movie Violence Scenes : லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி. ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் ரஜினிகாந்த் (Rajinikanth) வரை, உச்ச நடிகர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றியிருப்பவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்திலும் மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி (Coolie). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக்ஷ்ன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் பான் இந்தியப் பிரபல நடிகர்கள் பலரும் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, அனிருத் லோகேஷ் கனகராஜுடன் 4வது முறையாக இணைந்த படம்தான் கூலி.
இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளானது ஒட்டுமொத்த இந்தியா அளவிற்குப் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படத்தில் வன்முறை (violence ) காட்சிகளில் எந்த சமரசமும் இல்லை என்றார் கூறியுள்ளார். மேலும் கூலி படத்தின் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் குறித்தும் பேசியுள்ளார்.




இதையும் படிங்க : 36 ஆண்டுகளுக்குப் பின்… ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படம் குறித்து வெளியான அப்டேட்!
கூலி திரைப்படத்தின் காட்சிகள் குறித்து லோகேஷ் கனகராஜ் பேச்சு :
அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், ரஜினிகாந்த்தின் படம் என்பதால் அவரின் ரசிகர்களுக்காகப் படத்தில் வன்முறை காட்சிகளை எதாவது குறைத்திருக்கிறீர்களா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “கூலி படத்தில் வன்முறை காட்சிகளில் எந்த சமரசமும் செய்யவில்லை. நான் இதை என் கூறுகிறேன் என்றால், ஆடியன்ஸ் ஒரு குடும்பமாகப் பார்க்கும்போது, எந்த எமோஷனல் ஒரு குடும்பத்தைத் தூண்டுமோ, அது எவ்வளவு தூரம் உங்களைச் சென்று அடையுமோ என அனைத்தும் இருக்கிறது.
இதையும் படிங்க : கூலி படத்தின் டிரெய்லர் கூட இன்னும் வெளியாகல… – அனிருத் பகிர்ந்த தகவல்
அதே சமயத்தில், கூலி படத்தில் எனது பிடிப்பையும் விடவில்லை. ஆனாலும் இந்தக் கூலி திரைப்படத்தில் துப்பாக்கிகள், போதைப் பொருட்கள் போன்றவற்றை நான் தவிர்த்துவிட்டேன். எப்போதும் போல இந்த கூலி படம் இருக்காது, ஆனால் நிறைய அடல்ட் காட்சிகள் இப்படத்தில் இருக்கிறது. ரஜினிகாந்த்தை திரைப்படங்களில் கொஞ்ச நாள் பார்க்காததை, இந்தப் படத்தில் பார்ப்பீர்கள்” என லோகேஷ் கூறியிருந்தார்.
கூலி திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் பதிவு :
#Coolie censored 🅰️ #Coolie releasing worldwide August 14th 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off @Dir_Chandhru… pic.twitter.com/p2z6GEOb6K
— Sun Pictures (@sunpictures) August 1, 2025
ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்திற்குத் தணிக்கை குழு “ஏ” தரச் சான்றிதழைக் கொடுத்துள்ளது. ரஜினிகாந்த்தின் நடிப்பில் வெளியான தமிழ் படங்களில், 36 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூலி படமானது “ஏ” தர சான்றிதழைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.