Lokesh Kanagaraj : மீண்டும் ரஜினிகாந்த்துடன் கூட்டணி.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
Lokesh Kanagaraj And Rajinikanth collaboration : தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை அடுத்ததாக, ரஜினிகாந்த்துடன் படத்தில் இணைகிறாரா என்பது குறித்து அவர் பேசியுள்ளார். அது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் மாநகரம் (Maanagaram) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல படங்களை வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. நடிகர் கார்த்தியின் (Karthi) கைதி (Kaithi) திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் நெருக்கமான லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாகத் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) இணைந்து மாஸ்டர் மற்றும் லியோ என்ற சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார். இந்த நிலையில் இவர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) 171வது திரைப்படமாக உருவாகியிருப்பது தான் கூலி (Coolie). இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படமானது அதிரடி கேங்ஸ்டரஸ் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.
ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்துடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி பேசியுள்ளார். அவர் அந்த நேர்காணலில் “கூலி 2 படம் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு, ஆனால் ரஜினிகாந்த்துடன் வேறு கதைக்களத்தில் படத்தில் இணைவேன்” எனக் கூறியுள்ளார்.




இதையும் படிங்க : ரெட்ரோ நாயகனாக துல்கர் சல்மான்.. வெளியானது காந்தா திரைப்படத்தின் டீசர்!
ரஜினிகாந்துடன் அடுத்த படத்தில் இணைவது பற்றி லோகேஷ் கனகராஜ் :
அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், கைதி 2 திரைப்படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த்துடன் வேறு எதாவது படத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “நானும் அவருடன் புதிய படத்தில் பணியாற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். கூலி திரைப்படத்தை பார்த்தப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் என்னிடம், இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணையவேண்டும் என ரஜினிகாந்த் சார் கூறினார்.
ஆனால் கூலி திரைப்படத்தின் தொடர்ச்சியாக அந்த படம் இருக்காது. கூலி படத்திற்கு ஆரம்பமும் மற்றும் சரியான முடிவும் இருக்கிறது. ரஜினிகாந்த்துடன் அடுத்த திரைப்படம் கூலி 2 திரைப்படமாக இருக்காது, வேறு கதைக்களம் கொண்ட படமாக இருக்கும்” என லோகேஷ் கனகராஜ் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க : வெளி நாடுகளில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் கூலி – வைரலாகும் பதிவுகள்!
கூலி திரைப்படத்தின் வெளிநாடு ப்ரீ புக்கிங் ஆரம்பம் :
From the Emerald Isle to Eastern Europe💥
We’re thrilled to announce that the #Coolie #Ireland release by @akstradersIrl 🇮🇪 #Malta release by @indeser_films 🇲🇹 #Georgia release by @BlackTickts 🇬🇪 #Hungary release by @dakshinfilms 🇭🇺
Exciting times ahead for cinephiles… pic.twitter.com/gmYWnfDMvq
— Hamsini Entertainment (@Hamsinient) July 27, 2025
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த படமானது உலகமெங்கும் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர்கான், சவுபின் ஷாஹிர் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீசிற்கும் இன்னும் 2 இருக்கும் நிலையில், வெளிநாடுகளில் படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.