Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kaantha : ரெட்ரோ நாயகனாக துல்கர் சல்மான்.. வெளியானது காந்தா திரைப்படத்தின் டீசர்!

Dulquer Salmaans Kaantha Movie Teaser : தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நாயகனாக இருந்து வருபவர் துல்கர் சல்மான். இவர் இன்று 2025, ஜூலை 28ம் தேதியில், தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, காந்தா திரைப்படத்திலிருந்து முதல் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Kaantha : ரெட்ரோ நாயகனாக துல்கர் சல்மான்.. வெளியானது காந்தா திரைப்படத்தின் டீசர்!
காந்தா திரைப்படம்
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Jul 2025 15:18 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்து வருபவர் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர். இப்படமானது இவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பைக் கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்து அவர் நடித்துள்ள திரைப்படம் காந்தா (Kaantha). இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியிருக்கும் நிலையில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி (Rana Daggubati) தயாரித்துள்ளார். இந்த காந்தா திரைப்படமானது பிளாக் அன்ட் வைட் திரைப்படம் போல உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri borse) நடித்துள்ளார். இந்நிலையில் இன்று 2025, ஜூலை 28ம் தேதியில், நடிகர் துல்கர் சல்மான் தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு இப்படக்குழு படத்தின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மோனிகா பாடலுக்கு முதலில் டான்ஸ் ஆட ஷௌபின் ஷாகீர் பயந்தார் – நடன இயக்குநர் சாண்டி

காந்தா படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு :

காந்தா படத்தின் ரிலீஸ் எப்போது :

துல்கர் சல்மான் மற்றும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முன்னணி நடிப்பில் இந்த காந்தா படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் இருந்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய வேடங்களில் ராணா டகுபதி மற்றும் சமுத்திரகனியும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சியான் விக்ரமிற்கு ஜோடியாகும் ஏஸ் பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா?

காந்தா திரைப்படத்தின் கதைக்களம் :

இந்த காந்தா திரைப்படமானது ரெட்ரோ காலத்தில் நடைபெறும் கதை கொண்ட படமாக உருவாகியுள்ளது. இப்படம் 1950ம் ஆண்டு மெட்ராஸில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியிருபதாக கூறப்படுகிறது. இந்த படமானது பழைய பிளாக் அன்ட் வைட் திரைப்படம் போல உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.