லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்
தெலுங்கி சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குநராக இருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரியை பான் இந்திய அளவில் பிரபலம் ஆக்கியது அவரது இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் தான். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri) தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 46 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜு நாயகியாக நடிக்க உள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். தொடர்ந்து வாத்தி படத்தில் இருந்து தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் வெங்கி அட்லூரியின் படத்திற்க் இசையமைக்க இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களது கூட்டணியில் வெளியான படங்களில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யா 46 படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி அவ்வப்போது பேட்டிகளில் கலந்துகொண்டு பேசுவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெங்கி அட்லூரியிடம் லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் வெங்கி அட்லூரி நிச்சயமாக அடுத்த பாகம் இருக்கு என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களை உற்சாகத்தில அழ்த்தியுள்ளது.
லக்கி பாஸ்கர் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thank you each & everyone for all the support given to us🤗 ♥️
Words are not enough to express our thanks, A Big Thank you 🙏 🙏🙏🙏again to all the persons behind this Mega Blockbuster 💥💥💥♥️@dulQuer @Meenakshiioffl @SitharaEnts @vamsi84 @kbsriram16 pic.twitter.com/lmBizf6mm8
— RockFort Entertainment (@Rockfortent) December 19, 2024
வெங்கி அட்லூரி – துல்கர் சல்மான் கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்த லக்கி பாஸ்கர் படம்:
இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் டின்னு ஆனந்த், பி. சாய் குமார், ராம்கி, ரகு பாபு, சர்வதாமன் டி. பானர்ஜி, சச்சின் கேடேகர் மற்றும் ஒய். காசி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
வங்கியில் சாதாரண கேசியராக இருக்கும் துல்கர் சல்மான் தனது கடின உழைப்பாள் பதவி உயர்வு கிடைத்துவிடும் என்று நினைத்து வேலை செய்து வருகிறார். ஆனால் தனது மேல் அதிகாரியின் சூழ்ச்சியால் அவருக்கு அந்த பதவி உயர்வு கிடைக்காமல் போகிறது. கஷ்டப்படும் குடும்ப சூழலில் இருக்கும் துல்கர் சல்மான் வங்கியில் இருக்கும் பணத்தை கைமாற்றிவிட்டு சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு கட்டத்தில் பெரிய அளவில் பணங்களை கைமாற்றி தொடர்ந்து அதிக அளவில் சம்பாதிக்கிறார். அவர் அந்த விசயத்தில் மாட்டுவாரா இல்லையா என்பதே படத்தின் கதை. விறுவிறுப்புக்கு சற்றும் குறைவு இல்லாத இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
திரையரங்குகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி தென்னிந்திய படங்கள் அதுவரை படைக்காத புதிய சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.