Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வசந்த் ரவியின் இந்திரா படத்திலிருந்து கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியிட்ட படக்குழு

INDRA Official Motion Poster: தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போதுட் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் வசந்த் ரவி. இவர் சினிமாவில் நடிகனாக அறிமுகம் ஆன போது இவருக்கு நடிக்கத் தெரியவில்லை என்று பல விமர்சனங்களை பெற்று தற்போது நல்லா நடிக்கிறார் என்று கூறும் அளவிற்கு தன்னை வளர்த்துக்கொண்டார்.

வசந்த் ரவியின் இந்திரா படத்திலிருந்து கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியிட்ட படக்குழு
வசந்த் ரவியின் இந்திரா படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jul 2025 18:23 PM

நடிகர் வசந்த் ரவி (Actor Vasanth Ravi) தற்போது நாயகனாக நடித்துள்ள படம் இந்திரா. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த 2023-ம் ஆண்டே படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் இந்திரா படத்தின் கதாப்பாத்திர அறிமுக வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இயக்குநர் சபரிஸ் நந்தா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் வசந்த் ரவி உடன் இணைந்து நடிகர்கள் மெஹ்ரீன் பிர்சாதா, சுனில், அனிகா சுரேந்திரன், கல்யாண், ராஜ்குமார் என பலர் இந்திரா படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து படத்தை JSM திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்ஃபான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள இந்திரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

 

விமர்சனங்களை தாண்டி தன்னை நடிகராக நிரூபித்த வசந்த் ரவி:

தமிழ் சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியான தரமணி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார் வசந்த் ரவி. இதில் நாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் நடிகர் வசந்த் ரவியின் நடிப்பை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

இந்த விமர்சனங்கள் அனைத்தையும் சீரியசாக எடுத்துக்கொண்ட நடிகர் வசந்த் ரவி அடுத்ததாக தனது நடிப்பில் வெளியான ராக்கி படத்தை ரசிகர்கள் வேற லெவல் என்று சொல்லும் அளவிற்கு தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். இது அவரை ட்ரோல் செய்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லாம்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகர் வசந்த் ரவி. இந்தப் படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து ரசிகர்கள் பாராட்டித்தள்ளியது குறிப்பிடத்தக்கது.