தமா படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ரசிகர்களுக்கு என் மீதான பார்வை மாறும் – நடிகை ராஷ்மிகா மந்தனா
Actress Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தொடர்ந்து படங்கள் வரிசைக்கட்டி வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தமா. ஹாரர் காமெடி பாணியில் உருவாகும் இந்தப் படம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியது வைரலாகி வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தமா. ஹாரர் காமெடியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் இயக்கவுள்ளார். மேலும் இந்தப் படத்தில் நாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். மேலும் முதன் முதலாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஹாரர் காமெடி படத்தில் நடிப்பதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
மேலும் ராஷ்மிகா மந்தனா மற்றும் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




தமா படம் குறித்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா:
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியதாவது, தமா படத்திற்காக நாங்கள் அதிகமாக உழைத்து உள்ளோம். தமா படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நாம 24- 25 படங்களில் நடித்து விட்டோம். இதற்கு மேல என்ன இருக்கு நாம செய்வதற்கு என்று நினைத்தேன்.
ஆனால் தமா படம் எனது அந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றிவிட்டத். ஆம் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ரசிகர்களுக்கு என் மீது உள்ள பார்வை மாறிவிடும் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், என் அம்மா என்னிடம் எப்பவும் சொல்லுவாங்க உனக்கு நடிப்பு தான் முக்கியம் என்றால் உன் சொந்த வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும்.
அப்படி இல்லை சொந்த வாழ்க்கை தான் முக்கியம் என்றால் உனது நடிப்பு வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் என்று கூறுவார். ஆனால் நான் எனது உழைப்பை இரண்டு மடங்காக கொடுத்து எனது நடிப்பு மற்றும் சொந்த வாழ்க்கையை சரியாக பார்த்துக்கொள்வேன் என்று கூறுவேன். அது என் வாழ்வில் தினமும் ஒரு பெரிய டாஸ்காக உள்ளது என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
இணையத்தில் கவனம் பெறும் நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டா போஸ்ட்:
View this post on Instagram