Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவானது ஃப்ரீடம் படம் – நடிகர் சசிகுமார் பேச்சு

Freedom Movie: நடிகர் சசிகுமார் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஃப்ரீடம். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படம் குறித்து நடிகர் சசிகுமார் சமீபத்தில் பேசிய வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவானது ஃப்ரீடம் படம் – நடிகர் சசிகுமார் பேச்சு
ஃப்ரீடம் படம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jul 2025 13:33 PM

நடிகர் சசிகுமார் (Actor Sasikumar) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஃப்ரீடம். இயக்குநர் சத்யா சிவா இந்த ஃபிரீடம் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை லிஜோ மோல் ஜோஷ் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மாளவிகா அவினாஷ் மற்றும் போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த ஃப்ரீடம் படம் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் எப்படி அடக்குமுறைக்கு ஆளாகினர் என்பது குறித்து எடுக்கப்பட்டது ஆகும். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. மேலும் ஃப்ரீடம் படம் வருகின்ற ஜூலை மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்து நடிகர் சசிகுமார் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஃப்ரீடம் படம் குறித்து சசிகுமார் சொன்ன விசயம்:

அதன்படி நடிகர் சசிகுமார் பேசியதாவது, தொடர்ந்து வித்யாசமான கதையில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாக உள்ளது. ஆனால் இந்த மாதிரியான சீரியசான கதைகளை நான் செய்வேன் என்று என்னை நம்பி வரும் இயக்குநர்களுக்காக நான் அந்தப் படத்தின் கதையை கேட்டு பிறகு அதில் நடிக்கிறேன்.

அந்த வகையில் ஃப்ரீடம் படத்தின் கதையைக் கேட்டதும் அதில் நான் நடிக்க முடிவு செய்தேன். இந்த படத்தில் காட்டப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் முன்பு செய்தி தாழ்களில் மட்டுமே பார்க்க முடியும். தற்போது உள்ள சூழலில் இப்படி நிகழ்ந்தால் நிச்சயமாக சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும்.

இந்தப் படம் 1995-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ஆகும். ஜெயிலில் இருந்த அவர்கள் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 14-ம் தேதி தப்பித்த கதைதான் இது என்றும் நடிகர் சசிகுமார் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

இணையத்தில் கவனம் பெரும் சசிகுமாரின் பேச்சு: