சூர்யாவின் 46-வது படத்தின் டைட்டில் இதுவா? இணையத்தில் வைரலாகும் தகவல்!
Suriya 46 Movie: ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45-வது மற்றும் 46-வது படத்தின் பணிகளில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் 45-வது படத்திற்கு கருப்பு என்ற தலைப்பை படக்குழு முன்பே அறிவித்து விட்டது. இந்த நிலையில் 46-வது படத்தின் டைட்டில் குறித்து இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது.

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 45-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் தலைப்பு கருப்பு என்பதை படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாள் அன்று அறிவித்தனர். மேலும் படத்தின் வெளியீட்டு தேதி நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் அறிவிக்கப்படும் என்று படக்குழு முன்னதாக அறிவித்துள்ளது. இப்படி தொடர்ந்து சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகின்ற நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் அவரது 46-வது படத்தில் டைட்டில் குறித்த வதந்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 46. இந்தப் படத்தை சூர்யா 46 என்று தற்காலிகமாக அடையாளப்படுத்தினாலும் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்திற்கு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.




வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா:
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் இறுதியாக இயக்கிய லக்கி பாஸ்கர் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லக்கி பாஸ்கர் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைத்தார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜு நாயகியா நடித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 46 படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The most anticipated #Suriya46 has been officially launched with a grand pooja ceremony! 🔥@Suriya_offl x #VenkyAtluri unite to create magic on screen! 💥💥
Thank you #Trivikram garu for gracing and marking the beginning of this journey with the first clap 🎬
🎬 Shoot begins… pic.twitter.com/is7MhRkVAF
— Sithara Entertainments (@SitharaEnts) May 19, 2025