Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் தர்ஷனின் ஹவுஸ் மேட்ஸ் படத்தில் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

House Mates Movie: கனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நடிகராக அறிமுகம் ஆனவர் தர்ஷன். பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றார் நடிகர் தர்ஷன். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தர்ஷனின் ஹவுஸ் மேட்ஸ் படத்தில் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
ஹவுஸ் மேட்ஸ் Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jul 2025 12:48 PM

நடிகர் தர்ஷன் (Actor Darshan) நாயகனாக தற்போது நடித்துள்ள படம் ஹவுஸ் மேட்ஸ். ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ராஜவேல் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்த ஹவுஸ் மேட்ஸ் படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடெக்‌ஷன் தயாரித்து உள்ளது. மேலும் இந்த ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடிகர் தர்ஷன் உடன் இணைந்து நடிகர்கள் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி,  அப்துல் லீ, தீனா, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஹவுஸ் மேட்ஸ் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி நடிகர் தர்ஷன் அதனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, ஹவுஸ் மேட்ஸ் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று போஸ்டருடன் அறிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஹவுஸ் மேட்ஸ் படம் குறித்து தர்ஷன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நடிகர் தர்ஷன் நடித்தப் படங்கள்:

நடிகர் தர்ஷன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனது சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தின் மூலமாகதான். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி காம்போவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக எண்ட்ரி கொடுத்தார் தர்ஷன்.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தப் படம் கனா. இந்தப் படத்தை இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கி இருந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்தார். இந்தப் படத்தில் அவரை காதலிக்கும் நபராக படத்தின் நாயகன் அந்தஸ்தை பெற்றார் தர்ஷன்.

இந்தப் படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் நடிகர் தர்ஷன் பெற்ற்போதிலும் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. பின்பு தும்பா மற்றும் துணிவு ஆகிய படங்களில் நடித்த நடிகர் தர்ஷன் தற்போது ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.