Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நாயகனாக களமிறங்கும் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Director Abhishan jeevinth: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் அபிஷன் ஜீவிந்த். இவரது இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேறபைப் பெற்றது. இந்த நிலையில் இவர் தற்போது நாயகனாக அறிமுகம் ஆக உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றது.

நாயகனாக களமிறங்கும் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jul 2025 14:59 PM

சமீபத்தில் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநர்கள் இயக்கிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது வழக்கமாகி வருகிறது. அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Director Abishan Jeevinth). இவர் இயக்கத்தில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து இருந்தார். இவருக்கு நாயகியகா நடிகை சிம்ரன் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரமேஷ் திலக், மிதுன் ஜெய் சங்கர், யோகி பாபு, கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பக்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இவரது இயக்கம் பாராட்டப்பட்டது போல அபிஷன் ஜீவிந்த் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் வாழ்த்தினர்.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து படக்க்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நாயகனாக அறிமுகம் ஆகும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்:

டூரிஸ்ட் ஃபேமிலி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று ரசிகரக்ள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் நாயகனாக அறிமுகம் ஆக உள்ளார் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.

அதன்படி இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு கரெக்டர் மச்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தை அபிஷன் ஜீவிந்த் உடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் அபிஷன் ஜீவிந்திற்கு நாயகியாக நடிகை அனஸ்வர ராஜன் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.