பேசில் ஜோசஃப் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்களின் லிஸ்ட் இதோ!
Actor Basil Joseph: மலையாள சினிமாவில் நாயகன் மற்றும் இயக்குநர் என்று ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகர் பேசில் ஜோசஃப். மலையாளத்தில் தொடர்ந்து பேசில் ஜோசஃப் படங்கள் நடித்து இருந்தாலும் இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே: நடிகர் பேசில் ஜோசஃப் (Actor Basil Joseph) நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்தப் படத்தை இயக்குநர் விபின் தாஸ் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை தர்ஷனா ராஜேந்திரன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அஜு வர்கீஸ், அஸீஸ் நெடுமங்காட், ஆனந்த் மன்மதன், ஷீத்தல் ஜக்காரியா, சுதீர் பரவூர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். அரேஞ் மேரேச்சில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் திருமணத்திற்கு பிறகு சில ஆண்கள் தாங்கள் திருமணம் செய்யும் பெண்களுக்கு எந்தவித தனிபட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இருக்கக் கூடாது என்று நினைக்கும் ஆண்களை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.
மலையாளத்தில் உருவான இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஓடிடியில் இந்தப் படம் வெளியான பிறகு தென் இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் ட்ரெய்லர்:




ஃபலிமி: நடிகர் பேசில் ஜோசஃப் நாயகனாக நடித்து கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஃபலிமி. இந்தப் படத்தை இயக்குநர் நிதிஷ் சகாதேவ் எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் உடன் இணைந்து நடிகர்கள் ஜெகதீஷ், மஞ்சு பிள்ளை, சந்தீப் பிரதீப், அபிராம் ராதாகிருஷ்ணன், போலோராம் தாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். திருமணத்திற்காக நீண்ட நாட்களாக பெண் தேடும் பேசில் ஜோசஃபிற்கு இறுதியில் திருமணம் முடிந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.
ஃபலிமி படத்தின் ட்ரெய்லர்:
குருவாயூர் அம்பலனடையில்: நடிகர்கள் பேசில் ஜோசஃப் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் குருவாயூர் அம்பலனடையில். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர்கள் பேசில் ஜோசஃப் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் உடன் இணைந்து நடிகர்கள் நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், யோகி பாபு, சிஜு சன்னி, ஜெகதீஷ், பைஜு சந்தோஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.