Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மோனிகா பாடலுக்கு முதலில் டான்ஸ் ஆட ஷௌபின் ஷாகீர் பயந்தார் – நடன இயக்குநர் சாண்டி

Dance Choreographer Sandy: தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதில் குறிப்பாக மோனிகா பாடல் இணையத்தில் படு வைரலானது குறிப்பிடத்தக்கது.

மோனிகா பாடலுக்கு முதலில் டான்ஸ் ஆட ஷௌபின் ஷாகீர் பயந்தார் – நடன இயக்குநர் சாண்டி
மோனிகா பாடல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 28 Jul 2025 14:12 PM

ரஜினிகாந்தின் (Super Star Rajinikanth) நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரபல தயாரிப்பாளர் கலாநிதிமாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் சௌபின் ஷாகிர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல கவனத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூலி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஷௌபின் ஷாகிர் படத்தில் இருந்து வெளியான மோனிகா பாடலில் நடிகை பூஜா ஹெக்டே உடன் இணைந்து தனது சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். கூலி படத்தில் இந்த மோனிகா பாடலுக்கு மட்டும் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஷௌபின் ஷாகிரின் நடனம் குறித்து பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி:

இந்த நிலையில் இந்த மோனிகா பாடலுக்கு நடன இயக்குநராக பணியாற்றிய பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றது. அதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி கூறியதாவது, முதலில் இந்த மோனிகா பாடலுக்கு நடிகர் ஷௌபின் ஷாகிர் டான்ஸ் ஆட பயந்ததாக தெரிவித்துள்ளார்.

ஷௌபின் ஷாகிர் தான் நடித்த மலையாளப் படங்களில் சின்ன சின்ன நடனங்களை ஆடியுள்ளார். ஆனால் அது எதுவும் இப்படி ஒரு பாடலுக்கு முழு நீள நடனமாக இல்லாமல் அவரே அவருக்கு தோனும் நடன அசைவுகளை படத்தின் இடையே ஆடியிருப்பார். அப்படி இருந்த சூழலில் இந்தப் பாடலுக்கு முதலில் நடனம் ஆட சௌபின் ஷாகீர் முதலில் பயந்தார்.

Also Read… Vijay Deverakonda: சூர்யாவின் மேல் இருக்கும் அன்பு.. விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்!

பிறகு அவரை சமாதானம் செய்து இந்தப் பாடலுக்கு நடனம் ஆட வைத்தோம். பாடலில் அவரது நடனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்றும் நடன இயக்குநர் சாண்டி அந்தப் பேட்டியில் தெரிவிஹ்ட்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது:

Also Read… கைதி 2 படத்தில் புது கதாப்பாத்திரங்கள் இருக்கு – லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்