Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3BHK Movie: ‘3BHK’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

3BHK OTT Release Update : நடிகர் சித்தார்த்தின் முன்னணி நடிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான திரைப்படம் 3BHK. இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படமானது வெளியாகி 4 வாரங்களான நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

3BHK Movie: ‘3BHK’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
3BHK திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jul 2025 19:30 PM

தமிழ் சினிமாவில் நடிகர் சித்தார்த் (Siddharth) மற்றும் சரத்குமாரின் (Sarathkumar) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் 3BHK. இந்த படமானது நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை தமிழ் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் எட்டு தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இயக்கத்தில் இந்த 3BHK திரைப்படமானது, கடந்த 2025 ஜூலை 4ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்றே கூறலாம். இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை தேவயானி (Devayani) நடித்திருந்தார்.  பல ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி இப்படத்தில் இணைந்து நடித்திருந்தது.

இந்த 3BHK திரைப்படமானது முற்றிலும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் கதைக்களம் கொண்டு வெளியாகியிருந்தது. இப்படமானது திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களைத் தொடும் நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்பதைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 04ம் தேதியில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் நிகழ்ச்சி குறித்து இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சாய் அபயங்கர் திறமையோடு வந்திருக்கிறார்… விஜய் ஆண்டனி பேச்சு!

3BHK படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் பதிவு :

 

3BHK திரைப்படத்தின் மொத்த வசூல் :

சித்தார்த் மற்றும் சரத்குமாரின் முன்னணி நடிப்பில் இந்த 3BHK திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் தேவயானி மற்றும் மீத்தா ரகுநாத் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த 3BHK திரைப்படம் முற்றிலும் எமோஷனல், வீடு மற்றும் மிடில் கிளாஸ் குடும்பத்தில் கஷ்டங்கள் போன்ற திரைக் கதைகளுடன் வெளியாகியிருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் மக்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது மொத்தம் சுமார் ரூ. 13.63 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து KOIMOI இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அமேசானில் காணக் கிடைக்கும் குபேரா படம்… தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணம் என்ன?

குறைந்த பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு :

இந்த 3BHK திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. தற்போது மக்கள் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை, ஒப்பிடும்போது, சிறு பட்ஜெட் படங்களுக்கும் தங்களின் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதைபோல இந்த 3BHK திரைப்படமும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது