அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் யார் அந்த நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்க முடியும் என்ற கேள்விக்கு தெளிவான பதில் யாரிடமும் இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க செனட் குழு முன் பேசிய அவர், ஈரானில் ஆட்சியை மாற்றுவது வெனிசுவேலாவைப் போல எளிதான விஷயம் அல்ல என்றும், இது மிகச் சிக்கலான அரசியல் சூழல் கொண்டது என்றும் கூறினார்.