அமேசானில் காணக் கிடைக்கும் குபேரா படம்… தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாத காரணம் என்ன?
Kubera Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. ஆனால் இந்தப் படம் மற்ற தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்றாலும் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சேகர் கம்முலா (Director Sekhar Kammula) இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் குபேரா. இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். இது மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தமிழ் ரசிகர்கள் தவிற மற்ற மொழி ரசிகர்களிடையே திரையரங்குகளில் வெளியான போது நல்ல விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.




தமிழில் வரவேற்பைப் பெறாத குபேரா படம்:
குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. அதற்கு காரணம் நடிகர் தனுஷ் இதுவரை எந்தப் படத்திலும் ஏற்று நடிக்காத பிச்சைக்காரர் வேடத்தில் நடித்து இருந்தார். இதன் காரணமாகவே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து படம் திரையரங்குகளில் வெளியான போது தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இது படக்குழுவிற்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் படத்தைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் இந்தப் படத்தின் கதை மற்றும் படத்தின் மேக்கின், படத்தின் நீளம் என பல நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்தனர்.
Also Read… கூலி படத்தில் வைலன்ஸ்ட் காட்சிகளில் எந்த சமரசமும் செய்யவில்லை – லோகேஷ் கனகராஜ்
ஆனால் இந்த குபேரா படம் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இந்த கதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாரு இல்லாததே தமிழில் வெற்றியடையாமல் போனதற்கு காரணம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குபேரா படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A devaa-ststingly amazing performance for the history books 🤌#KuberaaOnPrime, Watch Now pic.twitter.com/d96DW72XIy
— prime video IN (@PrimeVideoIN) July 18, 2025
Also Read… நடிப்பிற்காக எவ்வளவு கடுமையாக உழைக்கவும் நான் தயார் – டிஎன்ஏ பட நடிகை நிமிஷா சஜயன்