Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாமக தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் சேரன் – ராமதாஸாக நடிக்கும் நடிகர் ஆரி!

Ayya - The Lion of Tamil Nadu: தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்த உலக சினிமாவில் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து பல படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வரிசையில் தற்போது தமிழக அரசியல் தலைவர் ராமதாஸ் அவர்களின் வாழ்க்கையை படமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

பாமக தலைவர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் சேரன் – ராமதாஸாக நடிக்கும் நடிகர் ஆரி!
அய்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2025 13:04 PM

தமிழ் சினிமாவில் குடும்ப செண்டிமெண்ட் படங்களை எடுத்து சூப்பர் ஹிட் இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் சேரன் (Director Cheran). இவரது இயக்கத்தில் இறுதியாக வந்த படங்கள் பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் மலையாளத்தில் நடிகர் டொவினோ நாயகனாக நடித்து வெளியான நரிவேட்ட படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தார். இது இவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த நரிவேட்ட படத்தில் நடித்த சேரனின் நடிப்பும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் சேரன் மீண்டும் தமிழ் சினிமாவில் படம் இயக்குவது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படமாகும் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு:

தமிழ் நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் மக்களுக்கு நன்கு பரிச்சையமான கட்சிகள் என்பது விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த பரிச்சையமான கட்சிகளில் ஒன்றுதான் பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பல முக்கிய அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்சி தமிழகத்தில் தனித்து ஆட்சி செய்யவில்லை என்றாலும் பலமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது கட்சியிலும் இவருக்கும் இவரது மகனுக்கும் இடையே சில பிரச்னைகள் நிழவுவதால் செய்திகளில் அதிகமாக இடம் பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… வேட்டையன் படத்தில் பேட்ரிக் ரோல் இப்படிதான் கிடைத்தது – ஃபகத் பாசில் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

இந்த நிலையில் இன்று பாமக தலைவர் ராமதாஸ் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு படமாக ஆக உள்ளதை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி இயக்குநர் சேரன் இந்தப் படத்தை இயக்க உள்ளதாகவும் நடிகர் ஆரி அர்ஜுனன் அந்தப் படத்தில் ராமதாஸாக நடிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநர் சேரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்தது – மாரீசன் படத்தை புகழ்ந்து பேசிய கமல் ஹாசன்!