இரண்டாவது திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா? இணையத்தில் வைரலாகும் தேதி!
Samantha Marriage News: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது உடல் நலக் குறைவு காரணமாக நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் இவர் இயக்குநர் ராஜை காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது திருமண தேதி உறுதியானதாக செய்திகள் வைரலாகி வருகின்றது.

நடிகை சமந்தா ரூத் பிரபு (Actor Samantha Ruth Prabhu) தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தார். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலக் குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் சினிமாவில் மற்றொரு அவதாரமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் நடிகை சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சமீபத்தில் சுபம் என்ற படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தயாரித்தது மட்டும் இன்றி இதில் கேமியோ ரோலிலும் நடிகை சமந்தா நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தொழில் வாழ்க்கை ஒருபுறம் இருக்க நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை குறித்த வதந்திகள் அவ்வபோது வெளியாகி வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் நடிகை சமந்தா இந்தியில் தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் நடித்து இருந்தார். இந்த சீரிஸை ராஜ் மற்றும் டிகே என இருவர் இயக்கி இருந்தனர். இதில் இயக்குநர் ராஜ் உடன் நடிகை சமந்தா காதலில் இருப்பதாகவும் அவர்கள் டேட் செய்து வருகிறார்கள் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வேகமாக பரவி வந்தது.




இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை சமந்தா?
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமந்தாவின் முன்னாள் கணவர் நடிகர் நாக சைத்தன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாவிற்கும் திருமணம் நடைப்பெற்றது. அதில் இருந்தே சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகம் இருந்தது.
தற்போது இந்த கேள்விகளுக்கு பதிலாக நடிகை சமந்தா இயக்குநர் ராஜை விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாகவும் அதற்காக வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. அதுமட்டும் இன்றி திருமண் தேதி குறித்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி சமந்தாவின் திருமணம் வருகின்ற அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளதாகவும் இந்த திருமணம் மிகவும் சிம்பிளாக உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டும் வைத்து நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
Also Read… 25 மில்லியன் பார்வைகளை கடந்த பராசக்தி படத்தின் டைட்டில் வீடியோ – படக்குழு வெளியிட்ட பதிவு
ராஜ் உடன் நடிகை சமந்தா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் கதை என்ன? இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்