இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட்ஸ் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Idly Kadai: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் இட்லி கடை. இந்தப் படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் (Actor Dhanush) தற்போது இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை (Idly Kadai Movie). இந்தப் படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் நடிகர் தனுஷின் போஸ்டர்கள் வெளியானதால் இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் படம் வெளியானபிறகே அது என்ன என்பது குறித்து தெரியவரும். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், பார்த்திபன், பி.சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி இட்லி கடை படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் எழுதி அவரே பாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




Also Read… மாரீசன் VS தலைவன் தலைவி… ஜூலை 25-ம் தேதி எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க?
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட் பதிவு:
The first single from #Idlykadai will be a love song …. Sung by our dearest @dhanushkraja sir and shwetha mohan…. Written by our @dhanushkraja sir …. It’s my favourite trk from the album … 🎶 🧑🍳🔥🙌 pic.twitter.com/M3SmpkO6J7
— G.V.Prakash Kumar (@gvprakash) July 22, 2025
நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான குபேரா படம் பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. மற்ற மொழிகளில் படம் வரவேற்பைப் பெற்றாலும் தமிழ் ரசிகர்கள் அந்தப் படத்தை கொண்டாடவில்லை. இந்த நிலையில் அவர்கள் அடுத்ததாக இட்லி கடை படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்ற்னர்.
அதன்படி இட்லி கடை படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தை தனுஷே இயக்கி நடித்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பர்ப்பும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.