மாரீசன் VS தலைவன் தலைவி… ஜூலை 25-ம் தேதி எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க?
Theatre Release Movies: கோலிவுட் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தொடர்ந்து புதுப் படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த வாரமும் திரையரங்குகளில் படங்கள் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. அந்தப் படங்களின் விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தமிழ் சினிமாவில் (Tamil Cinema) நூற்றுக்கணக்கான படங்கள் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பல உச்ச நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் யாருமே எதிர்பார்க்காமல் பல சிறிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்களிடையே தற்போது சினிமா ரசனை மாறிவிட்டது என்றுகூட சொல்லலாம். முன்பு எல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் அது நல்லா இருக்கோ இல்லையோ படம் வசூலில் மாஸ்காட்டிவிடும். ஆனால் தற்போது அப்படி இல்லை ஒரு படத்தின் கதை மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்றால் அது எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் படத்தை வெளிப்படையாகவே விமர்சனம் செய்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
இப்படி ஒவ்வொரு வாரமும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்து வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியின் படங்கள் தான் போட்டிப்போட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஃபகத் பாசில் & வடிவேலு நடிப்பில் வெளியாகும் மாரீசன்:
நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு கூட்டணியில் முன்னதாக வெளியான மாமன்னன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் மாரீசன் படத்திற்காக இணைந்துள்ளது. மாமன்னன் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையில் இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




அந்த வகையில் இந்தப் படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாரீசன் படத்தின் ட்ரெய்லர் இதோ:
விஜய் சேதுபதி & நித்யா மேனன் நடிப்பில் வெளியாகும் தலைவன் தலைவி படம்:
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ள படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் வருகின்ற 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.