Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காந்தா படம்.. துல்கர் சல்மானுக்காக ரிஸ்க் எடுத்த நடிகர் ராணா டகுபதி!

Rana Daggubati About Dulquer Salmaan : இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், பான் இந்திய திரைப்படமாக உருவாகிவருவது காந்தா. நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கும், இப்படத்தை நடிகர் ராணா தயாரித்து வருகிறார். இந்நிலையில், இந்த காந்தா படத்தை தயாரித்ததற்குக் காரணம் பற்றி, நடிகர் ராணா வெளிப்படையாகப் பேசியுள்ளார் அதைப் பற்றி விவரமாக பார்க்கலாம்.

காந்தா படம்.. துல்கர் சல்மானுக்காக ரிஸ்க் எடுத்த நடிகர் ராணா டகுபதி!
ராணா டகுபதி மற்றும் துல்கர் சல்மான்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 21 Jul 2025 11:47 AM

மலையாள சினிமாவை தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இறுதியாக வெளியான படம் லக்கி பாஸ்கர் (Lucky Bhaskar). இந்த படமானது எதிர்பார்த்ததைவிடவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் செல்வமணி செல்யராஜ் (Selvamani Selyaraj) இயக்கத்தில், பான் இந்திய மொழி படமாக உருவாகிவருவது காந்தா (Kaantha). இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துள்ளார்.

மேலும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ், நடிகர் ராணா டகுபதி (Rana Daggubati) இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராணா, துல்கர் சல்மான் காந்தா படத்தில் நடிப்பதால் மட்டுமே , இந்தப் படத்தைத் தயாரித்ததாக ஓபனாக பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இட்லி கடை மற்றும் தலைவன் தலைவி ஒரே கதையா? விளக்கம் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ்!

நடிகர் ராணா டகுபதி காந்தா படத்தைத் தயாரித்துப் பற்றி பேச்சு :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ராணா டகுபதி, துல்கர் சல்மானின் காந்தா படத்தை பற்றிப் பேசியிருந்தார். அதில் அவர், “நான் காந்தா திரைப்படத்தின் நடிகர்களுக்கான தேடும் வீச்சில், இந்த படத்தில் துல்கர் சல்மானை விடவும் வேறு எந்த நடிகர்களுக்கும் என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. துல்கர் சல்மான் இந்த படத்திற்குக் கதாநாயகனாகச் சரியாக இருப்பார்.

இதையும் படிங்க : தனுஷின் ‘இட்லி கடை’ பட முதல் பாடல்.. அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றால், இந்த காந்தா படத்தைத் தயாரித்திருக்கவே மாட்டேன். ஏனென்றால் நடிகர் துல்கர் சல்மான், ஒரு அழகான சினிமாவாக இப்படத்தை மக்களுக்குக் கொண்டு செல்வார் என நினைத்தேன் என நடிகர் ராணா டகுபதி ஓபனாக பேசியிருந்தார். இந்த விஷயமானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட காந்தா பட போஸ்டர் பதிவு :

துல்கர் சல்மானின் இந்த படமானது 1980 ஆண்டு நடந்த ரெட்ரோ கதைக்களம் போல உருவாகிவருகிறது. இந்த படத்தில் நடிகர் ராணா டகுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம். மேலும் இப்படத்தில் துல்கர் சல்மான், பாக்கியஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூடிங் சமீபத்தில் நிறைவேற்ற நிலையில், இந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.