Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Idly Kadai : தனுஷின் ‘இட்லி கடை’ பட முதல் பாடல்.. அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!

Idly Kadai Movie First Single Update : நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் இட்லி கடை. இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறுவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.

Idly Kadai : தனுஷின் ‘இட்லி கடை’ பட முதல் பாடல்.. அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்!
தனுஷின் இட்லி கடை படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jul 2025 22:49 PM

தமிழ் சினிமாவில் பல்வேறு தனி திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா (Kuberaa). தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி சுமார் ரூ. 132 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் தமிழில் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை (Idly kadai). இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்திருக்கும் நிலையில், முதல் பாடல் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப் பதிவு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க :  கவின் – பிரியங்கா மோகனின் படத்தின் கதை இதுவா? – வெளியான அப்டேட்!

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இட்லி கடை திரைப்படத்தின் கதை

நடிகர் தனுஷ் இந்த இட்லி கடை படத்தில், அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் தனுஷுடன் நடிகர்கள் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே மற்றும் சமுத்திரக்கனி எனப் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் குடும்பம் மற்றும் கிக் பாக்சிங் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? – சுதா கொங்கரா பதில்

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் இப்படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தனுஷின் புதிய தமிழ்ப் படங்கள் :

நடிகர் தனுஷ் இந்த இட்லி கடை படத்தைத் தொடர்ந்து, டி54, டி55 மற்றும் டி56 என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் உருவாக்கவுள்ள படம் டி54. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். இப்படத்தை அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ள படம் டி55 .

இதைத் தொடர்ந்து மேலும் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், வரலாற்றுக் கதையில் தனுஷ் நடிக்கவுள்ளப் படம்தான் டி56 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் புதிய படங்களில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.