Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kavin: கவின் – பிரியங்கா மோகனின் படத்தின் கதை இதுவா? – வெளியான அப்டேட்!

Kavin And Priyanka Mohan Movie Shooting Update : நடிகர் கவின் ராஜ் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் கூட்டணியில் உருவாக்கவுள்ள படம் கவின்09 படம். இப்படத்தைச் இயக்குநர் கென் ராய்சன் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், இப்படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் அப்டேட் கொடுத்துள்ளார்.

Kavin: கவின் – பிரியங்கா மோகனின் படத்தின் கதை இதுவா? – வெளியான அப்டேட்!
கவின் மற்றும் பிரியங்கா மோகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jul 2025 14:17 PM

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கவின் ராஜ் (Kavin Raj). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக பிளடி பெக்கர் என்ற திரைப்படம் வெளியானது. கடந்த 2024 ஆண்டு இறுதியில் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தயாரித்திருந்தார். இந்த படமானது இவருக்குப் படு தோல்வியைத்தான் கொடுத்தது. இந்த படம் தோல்வியடைந்தாலும், விடாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இவரின் நடிப்பில் கிஸ் (Kiss) மற்றும் மாஸ்க் (Mask) என இரு படங்கள் ரிலீசிற்கு தயாராகிவருகிறது. இந்த இரு படங்களை அடுத்ததாக மேலும் தற்போது புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழ் கனா காணும் காலங்கள் என்ற சீரியலை இயக்கிய இயக்குநர் கென் ராய்சன் (Ken Royson), சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவுள்ள படம் கவின்09 (Kavin09).

நடிகர் கவின் மற்றும் பிரியங்கா மோகனின் (Priyanka Mohan) இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இயக்குநர் கென் ராய்சன் இப்படத்தின் கதைக்களம் மற்றும் ஷூட்டிங் குறித்த தகவலைக் கூறியுள்ளார். அவர் “இந்த படமானது ரொமான்டிக் மற்றும் காமெடி கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாக” கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

கவினின் புதிய படத்தின் கதை பற்றி இயக்குநர் பேச்சு :

இயக்குநர் கென் ராய்சன் கொடுத்த தகவலின்படி, ” இந்த படமானது பேண்டஸி ரொமான்டிக் – காமெடி திரைப்படமாக உருவாக்கவுள்ளது. இப்படத்தின் கதையாக, ” வாழ்க்கை உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதையும், அவற்றை நீங்கள் சரியான வழியில் பயன்படுத்துவதையும், அதை நிராகரித்தால் அதை மீண்டும் அடைவதற்குப் படும் கஷ்டங்கள்” பற்றிய கதை இருக்கும். மேலும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025 அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க : துருவ் விக்ரமின் ‘பைசன்’.. தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

ஃபேண்டஸி ரோமெண்டிக் – காமெடி படங்கள், தமிழில் நிறைய வெளிவந்துள்ளது, ஆனால் என்னுடை படம் இசை சார்ந்ததாக இருக்கும். இப்படத்தின் கதையானது நிச்சயமாக இந்த ஜெனரேஷன் மக்களைச் சேரும் என எதிர்பார்க்கிறேன். மேலும் இப்படத்தின் ஸ்கிரிப்பை எழுதும்போது எனது முதல் தேர்வு நடிகராக இருந்தவரும் கவின்தான். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகனை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்” இயக்குநர் கென் ராய்சன் ஓபனாக கூறியிருந்தார்.

இதையும் படிங்க : மோனிகா பாடலுக்காக எனது பெஸ்டை கொடுத்தேன்.. பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி பதிவு!

கவின் – பிரியங்கா மோகனின் புதிய பட ஷூட்டிங் புகைப்படங்கள் :

நடிகர் கவின் கிஸ் மற்றும் மாஸ்க் என அடுத்தாக, இரு படங்களில் கமிட்டாகியுள்ளார். இயக்குநர் கென் ராய்சனுடன் ஒருபடமும், தண்டட்டி படத்தை இயக்கிய இயக்குநர் ராம் சங்கையாவுடன், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களில் படப்பிடிப்பு ஷூட்டிங் பூஜைகளும், ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகத் தொடர்ந்து நடைபெற்றிருந்தது. இந்நிலையில் இந்த 2025ம் ஆண்டில் நடிகர் கவின் ராஜ், 2 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.