Kavin : ‘தண்டட்டி’ பட இயக்குநருடன் இணைந்த நடிகர் கவின் ராஜ்.. அப்டேட் இதோ!
Ram Sangaiah And Kavin Alliance Movie : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர்தான் கவின் ராஜ். இவரின் நடிப்பில் அடுத்தடுத்த புதிய படங்கள் உருவாகிவரும் நிலையில், தண்டட்டி பட இயக்குநருடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கவின் ராஜின் (Kavin Raj) நடிப்பில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிளடி பெக்கர் (Bloody beggar) திரைப்படம். இந்த படத்தைத் தமிழ் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) தயாரித்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புகளைப் பெறவில்லை. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 திரைப்படங்கள் உருவாகி வந்தது. இந்த படங்களை அடுத்தாக தற்போது மேலும் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான தண்டட்டி (Tandatti) திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராம் சங்கையா (Ram Sangaiah) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் (Prince Pictures) ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடந்த நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : கார்த்தியின் ‘மார்ஷல்’ – பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
பிரிஸ்ன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட கவின் புதிய பட பதிவு :
Prince Pictures’ next – joining hands with @Kavin_m_0431 and director @Dir_RamSangaiah for a new project – #ProductionNo18.
Produced by @lakku76.
Co Produced by @venkatavmedia. pic.twitter.com/gEB0DyKRqq— Prince Pictures (@Prince_Pictures) July 14, 2025
இயக்குநர் ராம் சங்கையா மற்றும் கவின் கூட்டணி :
நடிகர் கவினின் நடிப்பில் அடுத்தடுத்த புதிய படம் உருவாகிவரும் நிலையில், இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் மட்டும் ஷூட்டிங் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றது. இந்த படமானது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் 18வது திரைப்படமாக உருவாக்கவுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனத்துடன், தயாரிப்பாளர் வெங்கடேஷும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் கவின் மட்டும் நடிப்பதாக உறுதியாக்கியுள்ள நிலையில், மேலும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கவினின் புதிய படங்கள் :
பிளடி பெக்கர் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் கவின் ராஜின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் உருவாகிவருகிறது. நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் கிஸ். இந்த படத்தில் கவின் முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இப்படத்தின் ஷூடிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க : துல்கர் சல்மானின் ‘காந்தா’ ஷூட்டிங் நிறைவு.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
இதை அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கம் படம் மாஸ்க். இப்படத்தில் நடிகர் கவின் ராஜ், ஆண்ட்ரியா ஜெரேமியா என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில், ரிலீசிற்கு காத்திருக்கிறது. இத அடுத்ததாக நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது