Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jailar 2 : நெல்சன் பிறந்த நாள்.. ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் 2 படக்குழுவுடன் கொண்டாட்டம்!

Jailer 2 Crew Celebrated Nelson Dilipkumars Birthday : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் நெல்சன் திலீப்குமார். இவர் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இன்று 2025, ஜூன் 21ம் தேதியில் அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Jailar 2 : நெல்சன் பிறந்த நாள்.. ரஜினிகாந்த் மற்றும் ஜெயிலர் 2 படக்குழுவுடன் கொண்டாட்டம்!
நெல்சன் திலீப்குமார், ரஜினிகாந்த் மற்றும் யோகிபாபு Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 21 Jun 2025 16:46 PM

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) , ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து, வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) . இவரின் இயக்கத்தில் கோலிவுட் சினிமாவில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும் விஜய் முதல் ரஜினிகாந்த் வரை பல உச்ச நடிகர்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர் (Jailer) . கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஜெயிலர் 2 படத்தினையும் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்று 2025, ஜூன் 21ம் தேதியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது 41வது பிறந்தநாளைக்  (Nelson Dilipkumar’s birthday) கொண்டாடிவருகிறார். இதன் காரணமாக அவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், யோகி பாபு இணைந்து கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures)  தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயிலர் 2 படக்குழு :

ஜெயிலர் 2 திரைப்படம் :

கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படமானது எதிர்பார்த்ததைவிடவும் அதிகம் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படமானது வெளியாகி சுமார் ரூ. 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது . இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஜெயிலர் 2 படமானது உருவாகி வருகிறது.

இந்த படத்தையும் நெல்சன் திலீப்குமார்தான் இயக்கிவரும் நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கோவை பொள்ளாச்சியில் ஆரம்பமான நிலையில், அதை தொடர்ந்து கேரளா போன்ற இடங்களிலும் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து மேலும் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மைசூரில் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் 2 நடிகர்கள் :

இந்த ஜெயிலர் 2 படத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மற்றும் யோகி பாபு இணைந்த நடித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.