Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டேய் நீங்களாம் யாருடா? கோட் பட ஷூட்டிங்கில் விஜய் சொன்ன விசயம் – வைபவ் கல கல பேச்சு

Vaibhav about Vijay: நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கோட். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் பேசியது என்று ஒரு சுவாரஸ்யனாமன சம்பவம் பற்றி நடிகர் வைபவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

டேய் நீங்களாம் யாருடா? கோட் பட ஷூட்டிங்கில் விஜய் சொன்ன விசயம் – வைபவ் கல கல பேச்சு
வெங்கட் பிரபு மற்றும் விஜய்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 21 Jun 2025 11:11 AM

இயக்குநர் வெங்கட் பிரபு (Director Venkat Prabhu) இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் (Actor Vijay) நாயகனாக நடித்து இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் இரட்டை வேடங்களில் நடித்தப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகர் வைபவ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணயத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் நடிகர் வைபவ் பேசியதாவது, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடிகர் விஜய் பைக் ஓட்ட பின்னாடி நான் அமர்ந்து செல்வது போல ஒரு காட்சி இருக்கும்.

அந்த காட்சியில் நடிகர் விஜயிடம் இயக்குநர் வெங்கட் பிரபு நீங்க பைக் ஓட்டி பின்னாடி வைபவ் உக்காந்து சென்றால் தான் நன்றாக இருக்கும், அவன் பைக் ஓட்டி நீங்க பின்னாடி உக்காந்தால் பார்க்க அவ்வளவு சிறப்பாக இல்லை என்று கூறினார். உடனே அதை ஏற்றுக்கொண்ட விஜய் அந்த காட்சியில் நடிக்க தயாரானார்.

தி கோட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

நானும் விஜயின் பின்னால் சென்று பைக்கில் அமர்ந்தேன். உடனே என்னை திரும்பி பார்த்த விஜய் ஓ நீங்க அப்படி வரீங்களா என்று கூறி வெங்கட் பிரபுவை அழைத்தார். டேய் நீங்களாம் யாருடா என்று கேட்டார். மங்காத்தா படத்தில் அஜித் பைக் ஓட்ட பின்னாடி இவன் உக்காந்து வருவான். அதே மாதிரி இதுல நான் பைக் ஓட்ட அவன் பின்னாடி உக்காந்து வரனுமா என்று கேட்டார் என்று கலகலப்பாக தெரிவித்துள்ளார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜயுடன் நடித்த நடிகர்கள்:

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், வைபவ், மோகன், லைலா, ஜெயராம், பிரேம்ஜி அமரன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.