பல கோடிகளுக்கு விற்பனையான ரஜினிகாந்தின் கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை
Coolie Movie Overseas Rights: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமை தற்போது விற்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth) நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கூலி. வேட்டையன் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் மேலும் உற்சாகப்படுத்தியது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள நிலையில், தெலுங்கு சினிமாவில் இருந்து நடிகர் நாகர்ஜுனா (Actor Nagarjuna), கன்னட சினிமாவில் இருந்து நடிகர் உபேந்திரா ராவ், மலையாள சினிமாவில் இருந்து நடிகர் சௌபின் ஷாஹிர், இந்தி சினிமாவில் இருந்து நடிகர் அமீர் கான் ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வெளிநாட்டு உரிமையில் கல்லா கட்டிய கூலி படம்:
இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்துள்ள நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கேமியோ செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓவர்சீஸ் உரிமை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெலியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி கூலி படத்தின் வெளிநாட்டு உரிமை ரூபாய் 68 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், இந்தப் படம் வெளிநாட்டு உரிமையில் அதிகம் விற்பனையான படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவித்து வருகின்றது.
கூலி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
என்னைக்கும் கொறையாத மவுசு💥 #PowerHouseVibe is now available on Instagram & YT Shorts Audio🔊#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir pic.twitter.com/l3ss9KbB4e
— Coolie (@CoolieFilm) May 23, 2025
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த கூலி படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் பழையப் படத்தின் காட்சிகள் ரீ கிரியேட் செய்துள்ளதாக வெளியான தகவல்களை லோகேஷ் கனகராஜ் மறுத்துவிட்டார்.
ஆனால் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் பழையப் படத்தின் லுக் மட்டும் ரீ கிரியேட் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.