Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியானது என் மகனே பாடல்!

En Magane Lyrical Video (Tamil) | நடிகர் தனுஷ் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசைமைத்துள்ளார். முன்னதாக படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 4-வது பாடலைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியானது என் மகனே பாடல்!
குபேராImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2025 13:28 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் குபேரா. இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா (Director Sekhar Kammula) இயக்கியுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானபோது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ரசிகர்களால நேஷ்னல் க்ரஷ் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் படத்தில் இருந்து 4-வது சிங்கிள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

குபேரா படத்திலிருந்து 4-வது பாடலாக வெளியானது என் மகனே:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தில் இருந்து முன்னதாக மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து 4-வது பாடலான என் மகனே என்ற பாடலைப் படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படம் நாளை 20-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றது. மேலும் வித்யாசமனாக கதையில் நடிகர் தனுஷ் நடித்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

குபேரா படக்குழு என் மகனே பாடல் தொடர்பாக வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகும் இட்லி கடை:

தனுஷ் குபேரா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அவர் இயக்கி நடித்த இட்லி கடைப் படத்தின் பணிகளிலும் கவனம் செலுத்தி வந்தார். இந்தப் படம் முன்னதாஅக் ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடையாத காரணத்தால் வெளியீட்டு தேதி தள்ளிபோனது. அதன்படி படம் வருகின்ற அக்டோபர் மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.