Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பிரபல பாலிவுட் நடிகர்? வைரலாகும் தகவல்

Super Star Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் 74 வயதைக் கடந்தும் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கேமியோ செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பிரபல பாலிவுட் நடிகர்? வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Jun 2025 10:52 AM

இளம் நடிகர்களுக்கு போட்டியாக இல்லை இல்லை அவர்களை விட வேகமாக தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth). ஒரு படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அடுத்தப் படத்திற்கான அறிவிப்பை வெளியிடுகிறார். அதன்படி முன்னதாக வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். அதே போல கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போதே தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை அறிவித்தனர். இப்படி ப்ரேக்கே இல்லாமல் இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்தின் படங்களில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்கள்:

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி பாலிவுட்டின் பாட்ஷா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கான் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளது.

முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து முடித்துவிட்டு வெளியீட்டிற்காக இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் படம் கூலி. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ பண்ணியுள்ளார். இந்த தகவல் வதந்தியாக மட்டுமே இருந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் அமீர் கான் அதனை உறுதி செய்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் தென்னிந்திய பிரபலங்கள் கேமியோ ரோலில் நடித்து இருந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளனர். பெரும்பாலான நடிகர்களின் கேமியோ ரஜினிகாந்தின் படங்களில் அன்மையில் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 படம் குறித்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் வெளியிட்ட பதிவு: