விக்ரம் படத்தில் நடிக்காததற்கு காரணம் இதுதான் – ராகவா லாரன்ஸ் சொன்ன விசயம்
Raghava Lawrence: கோலிவுட் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் ராகவா லாரன்ஸ். அவர் தற்போது சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் நடிக்க மறுத்த காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருபவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். முன்னதாக நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க கேட்டபோது அவர் அதனை மறுத்துவிட்டார். அதற்கு காரணமாக அவர் கூறியது, ”அந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என்னால். எனது படங்களை குழந்தைகளுடன் சென்று பார்ப்பார்கள். அப்போது நான் ஒரு குடும்பத்தை எரிப்பது போன்றும் என்னால் நடிக்க முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் அந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்களை நான் குறை கூறவில்லை. ஆனால் என்னால் அந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது” என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் மாதம் 2-ம் தேதி 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் விக்ரம். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடிக்க இவருடன் இணைந்து நடிகர்கள் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, செம்பன் வினோத் ஜோஸ், சந்தான பாரதி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸின் இரண்டாவது படமாக இந்த விக்ரம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. போதைப் பொருள் தடுப்பு பிரிவில் இருந்த தனது மகன் காளிதாஸ் கொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய கமல் ஹாசன் இறந்துவிட்டதுபோல நாடகம் ஆடுவார்.
பின்பு என்ன நடந்தது என்பது படத்தின் கதை. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து இருதார். நாயகனோ வில்லனோ எதுவாக இருந்தாலும் சிறப்பாக செய்வேன் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக வில்லனாக மிரட்டியிருந்தார் என்ரே சொல்லலாம்.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தில் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எழுதிய பாக்கியராஜ் கண்ணன் தான் படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி வில்லனாக நடித்து வரும் நிலையில் நடிகை சம்யுக்தா நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 4-வது படமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பென்ஸ் படம் குறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Meet #Walter, Our very own certified Baddie AKA @nivinofficial 💥
🔗 https://t.co/O9DlmOpelh#BenzCastReveal 🔥
@GSquadOffl @PassionStudios_ @TheRoute @Dir_Lokesh @Jagadishbliss @Sudhans2017 @bakkiyaraj_k @SaiAbhyankkar @gouthamgdop @philoedit @jacki_art @actionanlarasu…
— Raghava Lawrence (@offl_Lawrence) June 4, 2025