Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனுபமா பரமேசுவரனுக்கு நடந்த அதே பிரச்னை சிம்ரனுக்கும் நடந்தது – சுரேஷ் கோபி ஓபன் டாக்

Suresh Gopi: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி. இவர் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் மலையாள சினிமாவில் நடிகை சிம்ரனுக்கு நடந்த அதே விசயம் தான் நடிகை அனுபமா பரமேசுவரனுக்கும் நடந்துள்ளது என்று பேசியிருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனுபமா பரமேசுவரனுக்கு நடந்த அதே பிரச்னை சிம்ரனுக்கும் நடந்தது – சுரேஷ் கோபி ஓபன் டாக்
சுரேஷ் கோபிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Jun 2025 13:22 PM

நடிகர் சுரேஷ் கோபி (Actor Suresh gopi) தற்போது ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா என்ற படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் நடிகை அனுபம பரமேசுவரன் (Actress Anupama Parameswaran) மலையாள சினிமா குறித்து பேசியதைத் தொடர்ந்து நடிகர் சுரேஷ் கோபி அனுபமா பரமேசுவரனுக்கு தற்போது மலையாள சினிமாவில் என்ன நடந்ததோ அதுதான் முன்பு நடிகை சிம்ரனுக்கும் நடந்தது என்று தெரிவித்து உள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகை அனுபமா பரமேசுவரன் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனது என்னமோ மலையாளத்தில் தான். ஆனால் அவர் அதிகப்படியாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தான் படங்களில் நடித்துள்ளார்.

இதற்கு காரணம் மலையாள சினிமாவில் தனக்கு நிறைய அவமானங்கள் நடந்ததாகவும் தனக்கு நடிக்க தெரிவியவில்லை என்று பல விமர்சனங்களை எதிர்கொண்டதாவும் அவர் தெரிவித்தார். அதனால் தான் 4 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் எந்தப் படங்களும் வரவில்லை என்றும் இந்த ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படத்தின் இயக்குநர் தன் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாப்பாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி என்றும் தெரிவித்து இருந்தார்.

நடிகை சிம்ரனுக்கும் இதே நிலைதான் – சுரேஷ் கோபி சொன்ன விசயம்:

இந்த மலையாள சினிமாத் துறையில் நடிகை அனுபமா பரமேசுவரன் மட்டும் இதுபோன்ற மோசமான விசயங்களை அனுபவிக்கவில்லை என்று பேசத் தொடங்கிய நடிகர் சுரேஷ் கோபி, நடிகை சிம்ரனும் மலையாள சினிமாவில் இதேபோன்ற புறக்கணிப்பை சந்தித்ததாக தெரிவித்தார்.

நடிகை அனுபமா பரமேசுவரன் தனது இதயத்திலிருந்து பேசினார். சினிமாவில் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடப்பது முதல் முறை அல்ல. ஆம் எனக்கு தெரியும் மலையாள சினிமா துறையால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சிம்ரன். ஆனால் அவர் பெரிய நடிகையாக அறியப்பட்ட பிறகு சிம்ரனை மலையாள சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்த இயக்குநர்களையும் எனக்குத் தெரியும் என்றும் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: