Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை பிரியாமணியின் நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ் – கவனம் பெறும் டீசர்

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பிரியாமணி தற்போது தென்னிந்திய சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தமிழில் இவர் நடித்த வெப் சீரிஸ் டீசர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

நடிகை பிரியாமணியின் நடிப்பில் வெளியாகும் வெப் சீரிஸ் – கவனம் பெறும் டீசர்
குட் வைஃப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2025 21:09 PM

கோலிவுட் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரேவதி (Actress Revathy) இயக்கியுள்ள இணையதள தொடர்தான் தி குட் வைஃப். இந்த தொடரில் நடிகை பிரியாமணி (Actress Priyamani) நாயகியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடிகர்கள் ஆரி அர்ஜுனன் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகையாக தென்னிந்திய சினிமாவை கலக்கிய ரேவதி தற்போது இயக்குநராக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெருவார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் நீதிமன்றத்தையும் விசாரணையையும் மையமாக வைத்து இந்த இணையதள தொடர் வெளியாகிறது. இதன் காரணமாக இந்தப் தொடரைப் பார்ப்பவர்களுக்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த தி குட் வைஃப் இணையதள தொடர் வருகின்ற ஜூலை மாதம் 4-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இணையத்தில் கவனம் பெறும் தி குட் வைஃப்:

இந்த நிலையில் தி குட் வைஃப் இணையதள தொடரின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் ஒரு தென்றல் புயலாகி வருகிறாள் என்று தெரிவித்து உள்ளனர். தனது 16-வது திருமண நாளில் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோவைப் பார்க்கிறார்.

அதனைத் தொடர்ந்து கணவர் அது நான் இல்லை என்னை பழிவாங்க யாரோ செயத சதி என்கிறார். இதற்கு இடையில் கணவர் கைதுசெய்யப்படவே அவருக்கு ஆதாராவகா வாதாட நடிகை பிரியாமணி களம் இரங்குகிறார். தொடர்ந்து என்ன நடக்கும் என்பது இந்த தொடரைப் பார்க்கும் போது தெரியவரும்.

ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்ட தி குட் வைஃப் டீசர் வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by JioHotstar Tamil (@jiohotstartamil)

நடிகை பிரியாமணியின் நடிப்பில் தமிழில் ஹிட் அடித்த படங்கள்:

நடிகை பிரியாமணி தமிழ் சினிமாவில் 2004-ம் ஆண்டு வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், கஸ்டடி, கொட்டேஷன் கேங் பார்ட் 1 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

இந்த வரிசையில் குறிப்பாக இவரை தமிழ் ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமாக்கியது இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படம் தான். இதில் முத்தழகு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.