AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெஞ்சைத் தொடும் பாசமிகு பாடல்… பறந்துபோ பட பாடலை பாராட்டிய சூரி

Actor Soori Praised Daddy Rompa Bhavam Song: இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தில் இருந்து பாடல் ஒன்று நேற்று படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலை நடிகர் சூரி பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நெஞ்சைத் தொடும் பாசமிகு பாடல்… பறந்துபோ பட பாடலை பாராட்டிய சூரி
சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2025 17:36 PM IST

இயக்குநர் ராம் (Director Ram) இயக்கத்தில் நடிகர் மிர்ச்சி சிவா (Mirchi Shiva) நடிப்பில் உருவாகியுள்ள படம் பறந்து போ. இந்தப் படத்தில் இருந்து நேற்று ஜூன் மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு டாடி ரொம்ப பாவம் என்ற பாடலைப் படக்குழு வெளியிட்டது. இந்தப் பாடலைப் பாராட்டி நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் சூரி கூறியுள்ளதாவது, ”டாடி ரொம்ப பாவம் பாடல் நெஞ்சைத் தொடும் பாசமிகு பாடல்! இயக்குநர் ராம் ஐயா, அப்பா-மகன் பாசத்தை அற்புதமாக படம் பிடிக்கும் உங்கள் பார்வை எப்போதும் உண்மையும் உணர்வும் கலந்தது. உங்கள் காட்சிகள் வெறும் படம் அல்ல… நெஞ்சில் ஆழமாக பதிந்து, நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கலை” என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

இந்தப் பாடலை பிரபல நடிகர் சித்தார்த் பாடியுள்ளார். பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்தப் பாடலின் வரிகளை எழுதியுள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

பறந்து போ பட பாடலைப் பாராட்டி நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இயக்குநர் ராம் இயக்கத்தில் மற்றொரு பாசமிகு படம்:

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட படங்களை இயக்க இயக்குநர்கள் பலர் இருந்தாலும் மனித உறவுகளையும் உறவுகளுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பு குறித்தும் படங்களை இயக்கும் இயக்குநர்கள் சொற்பமாகவே உள்ளனர். அப்படி மனித உணர்வுகளை இயக்கும் இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் ராம்.

முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான அனைத்தும் படங்களிலும் மனித உணர்வுகளை மையமாக வைத்தே இருக்குக். குறிப்பாக அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் மற்றும் பேரன்பு ஆகிய படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் மைல்கல்கள் என்றே சொல்லலாம்.

இப்படி அப்பா மகள் பாசத்தை காட்டிய இயக்குநர் ராம் தற்போது அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் பறந்து போ. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் கிரேஷ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்ஜீஸ், விஜய் ஏசுதாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

Follow Us