விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தனுஷ் பட நடிகை… அப்டேட் இதோ
Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளது யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி (2Actor Vijay Sethupathi) தற்போது இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Director Puri Jagannath) இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாகவே படக்குழு அறிவித்துவிட்டது. மேலும் நடிகை தபு இந்தப் படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நாயகியாக யார் நடிக்க உள்ளது என்பது குறித்து பல வதந்திகள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடிகை சம்யுக்தா நடிக்க உள்ளதாக அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இவர் முன்னதாக தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, சம்யுக்தாவைப் புகழ்ந்து கூறி பூரிசேதுபதியின் உலகத்திற்கு வரவேற்கிறோம் என்று புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டு இருந்தனர். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகை சம்யுக்தாவை வரவேற்று படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Grace in her stride. Fire in her eyes.
Welcoming the stunning @iamsamyuktha_ on board into the electrifying world of #PuriSethupathi ❤️🔥❤️🔥❤️🔥
A #PuriJagannadh film
Starring Makkalselvan @VijaySethuOffl, #Tabu, and @OfficialVijiProduced by Puri Jagannadh & @Charmmeofficial under… pic.twitter.com/RzlZMBs4DJ
— Puri Connects (@PuriConnects) June 17, 2025
நடிகை சம்யுக்தாவின் திரைப் பயணம்:
மலையாள சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார் சம்யுக்தா. அதனைத் தொடர்ந்து நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான தீவண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் இவர் சில படங்களில் நடித்து இருந்தாலும் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்து திரையரங்குகளில் வெளியான வாத்தி படம் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமாக்கியது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகை சம்யுக்தா மலையாளம் மற்றும் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடா மற்றும் இந்தி மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கு நாயகியாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.