Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சினிமாவில் ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சியைப் பாராட்டிய தனுஷ்!

Dhanuh talks about Rashmika mandanna: நடிகர்கள் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த குபேரா படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், சினிமாவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சியை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

சினிமாவில் ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சியைப் பாராட்டிய தனுஷ்!
தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Jun 2025 10:42 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நாயகியாக நடித்துள்ளார். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த 15-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் என அனைவரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பேசுகையில், சினிமாவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வளர்ச்சி குறித்து மிகவும் பாராட்டிப் பேசியிருந்தார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் பேசியதாவது,  “ரஷ்மிகா இந்த நேஷனல் க்ரஷ், 1000 கோடி, 2000 கோடி இது எல்லாத்தையும் மறந்துடுங்க. ஒரு படத்தில் நீங்கள் நடித்தால் அந்தப் படம் நன்றாக இருக்கும் என்றும், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உங்களுக்கு நீங்களே அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டீர்கள் என்றுதான் நான் கூறுவேன். அது உங்களுக்கும் தெரியும் என்றும் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகர் தனுஷ், இப்போது எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் அனைத்துப் படங்களிலும் நீங்கள் கடினமாக உழைத்து வருகிறீர்கள். இது மிகவும் அற்புதமான விசயம். மேலும் பாக்ஸ் ஆபிஸில் நீங்கள் உங்கள் 2000 கோடியை ரூபாயௌ சம்பாதித்து இருக்கீங்க, மேலும் சினிமாவில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை சம்பாதித்துள்ளீர்கள் என்று புகழ்ந்து தள்ளினார்.

மேலும் கூர்க்கைச் சேர்ந்த ஒரு சிறுமி என்ற அடையாளத்தில் இருந்து ஒரு பான்-இந்திய நட்சத்திரமாக மாறியது ஒரு அற்புதமான பயணம். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று நான் நினைக்கின்றேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. தொடந்து உங்களில் அடுத்தடுத்த திட்டங்களுக்கும், படங்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்” என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.

குபேரா படக்குழு வெளியிட்ட தனுஷின் வீடியோ பதிவு:

தனுஷ் – ராஷ்மிகா கூட்டணியில் வெளியாகும் குபேரா:

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாகவும் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்த குபேரா படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2925-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் நாகர்ஜுனாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.