AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம் – இயக்குநர் கொடுத்த அப்டேட்!

Actor Suriya: தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னதாக வெளியாகி ஹிட் அடித்தப் படங்கள் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்தப் படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீ ரிலீஸாகும் நடிகர் சூர்யாவின் சூப்பர் ஹிட் படம் – இயக்குநர் கொடுத்த அப்டேட்!
நடிகர் சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 16 Jun 2025 18:13 PM IST

கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுதடுத்து தனது நடிப்பில் படங்களை கைவசம் வைத்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வரும் நிலையில் சூர்யாவின் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியடையச் செய்யும் செய்தி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யா நடிப்பில் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஹிட் படம் ஒன்று மீண்டு ரீ ரிலிஸ் செய்ய உள்ளதாக இயக்குநர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அஞ்சான் படம் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரீ ரிலீஸ் ஆகும் சூர்யாவின் அஞ்சான் படம்:

நடிகர் சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி 2014-ம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தை இயக்கி இருந்தார். மேலும் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சமந்தா ரூத் பிரபு நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், தலிப் தஹில், முரளி ஷர்மா, ஜோ மல்லூரி, சூரி, சேத்தன் ஹன்ஸ்ராஜ், சஞ்சனா சிங் மற்றும் ஆசிப் பாஸ்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு தெலுங்கு உரிமை பெற்று படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளனர். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்து மீண்டு திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று பேட்டி ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி கூறியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யாவின் 46-வது படம் குறித்த எக்ஸ் தள பதிவு:

மேலும் நடிகர் சூர்யா தற்போது இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்திலும் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us